செய்திகள் :

`என்னை விடுங்க. குழந்தைகளை மட்டும்..' - பாம்பு கடித்தும் கதறிய தாய்; இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரன் - புஷ்பா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் தேவதர்ஷினி மற்றும் ஒன்றரை வயதில் தேவஜனனி என இரண்டு குழந்தைகள் இருந்தன. நேற்று இரவு சந்திரன் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், தன் இரண்டு மகள்களுடன் உறங்கியிருக்கிறார் புஷ்பா. சுமார் 10.30 மணியளவில் தன்னை ஏதோ கடித்ததாக உணர்ந்த புஷ்பா, அது என்னவென்று பார்த்திருக்கிறார்.

தன்னை கடித்தது பாம்பு என்று தெரிந்ததும், குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே ஓட நினைத்தார். அப்போதுதான் குழந்தைகளையும் பாம்பு கடித்திருப்பதைப் பார்த்திருக்கிறார். அதையடுத்து தங்களை பாம்பு கடித்துவிட்டது என்று அலறியிருக்கிறார் புஷ்பா. அவரது அலறலைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

பாம்பு

அங்கு மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தைகளின் உடல் முழுவதும் விஷம் பரவியிருந்ததால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அதையடுத்து தாய் புஷ்பாவை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான முறையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனக்கு முதலுதவி அளித்த மருத்துவர்களிடம், `என்னை விட்டுடுங்க. என் குழந்தைகளை எப்படியாவது காப்பாத்திடுங்க…' என்று புஷ்பா கதறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ``இவர்களின் வீடு ஏரிக்கரைக்கு அருகில் உள்ளது. பாம்பு உள்ளே நுழைந்து கடித்திருக்கிறது. கட்டுவிரியன் பாம்பு என்பதால் குழந்தைகளின் உயிர் உடனே பிரிந்துவிட்டது. தாய்க்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

திண்டுக்கல்லில் ஆசிட் டேங்கர் லாரி விபத்து; நச்சுப் புகையால் மக்கள் அவதி | Photo Album

ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்க... மேலும் பார்க்க

ஈரோடு: கட்டுப்பாட்டை இழந்த கார்; 17 பேர் காயம் - சாலை ஓரத்தில் காத்திருந்தவர்களுக்கு நிகழ்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள பங்களாபுதூர் தனியார் கல்லூரி பிரிவு பேருந்து நிறுத்தத்தில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 15 பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று காலை... மேலும் பார்க்க

ஓசூர்: சிப்காட்டில் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவன கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகிருஷ்ணகிரி மாவட்டம்... மேலும் பார்க்க

"எழுந்திரிங்க வீட்டுக்குப் போலாம்..!"- விபத்தில் இறந்த கணவர்; உடலுடன் மனைவி நடத்திய பாசப் போராட்டம்!

திருவாரூர், வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73) இவரது மனைவி ஜெயா (65). இவர்களுக்கு கவிதா என்ற மகள் உள்ளார். சங்கர்ராமன், திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நில... மேலும் பார்க்க

ஸ்பெயினில் பயங்கரம்: இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து – 30 பேர் பரிதாப பலி, பலர் படுகாயம்!

ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலிடோவில் (Toledo) இன்று (அக்டோபர் - 28) காலையில் இரு அதிவேக ரயில்கள் ஒன்றோடொன்று மோதி நேரிட்ட கொடூர விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந... மேலும் பார்க்க

ஈரோடு: கலெக்டர் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்; போலீஸ் விசாரணை

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருகிறார் கந்தசாமி. தமிழ்நாடு அரசின் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்று... மேலும் பார்க்க