"வரலாற்றை புரட்டிப் பாருங்கள்"- சிராஜ் விவகாரத்தில் எழுந்த பாகுபாடு குற்றச்சாட்ட...
சுப்ரீம் கோர்ட் நீதிபதி என நினைத்து ஒவைசிக்கு மரியாதை செலுத்திய உத்தரபிரதேச போலீஸார்! நடந்தது என்ன?
உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இதற்காக புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இதற்காக ஒவைசி உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள சஹாரன்பூரில் உள்ள சர்க்கியூட் ஹவுசில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி வருவதாக இருந்தது.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி வரவில்லை. மாறாக அசாதுதீன் ஒவைசி அங்கு வந்தார். இதனால் அவர் தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதி என நினைத்து அவருக்கு போலீஸ் அதிகாரிகள் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய மரியாதை செலுத்தினர்.
நீதிபதி வரவேண்டிய நேரத்தில் ஒவைசி வந்ததால் போலீஸார் குழப்பமடைந்து அவருக்கு சம்பிரதாய வணக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது. போலீஸ் மரியாதையை ஒவைசியும் ஏற்றுக்கொண்டார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூத்த காவல்துறை கண்காணிப்பாளர், சம்பவம் குறித்து விசாரிக்க காவல் கண்காணிப்பாளருக்கு (கிராமப்புற) உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பின் கிடைக்கும் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். சம்பிரதாய மரியாதை யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டதோ அந்த நபரை அடையாளம் காண்பதில் வெளிப்படையான குளறுபடி ஏற்பட்டதையே இது காட்டுகிறது.
சர்க்கியூட் ஹவுஸுக்கு ஒவைசியின் வருகை அவரது சுற்றுப்பயண திட்டத்தில் இல்லை, மேலும் அவர் எதிர்பாராத விதமாக அங்கு வந்ததாக கூறப்படுகிறது. ஒவைசி, ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷிராம்) தலைவர் சந்திரசேகர் ஆசாத் உடன் வந்திருந்தார். 2027 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரு தலைவர்களும் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்காக சஹாரன்பூர் வந்திருந்தனர்.


















