உச்ச நீதிமன்ற நீதிபதி என நினைத்து ஓவைசிக்கு சல்யூட்; உ.பி போலீஸின் குளறுபடி! நடந...
உச்ச நீதிமன்ற நீதிபதி என நினைத்து ஓவைசிக்கு சல்யூட்; உ.பி போலீஸின் குளறுபடி! நடந்தது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அளிக்கப்பட வேண்டிய காவல்துறை அணிவகுப்பு மரியாதையை, அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு உ.பி போலீஸார் தவறுதலாக வழங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2027 உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துடன் இணைந்து 'சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா' கூட்டணியை ஓவைசி அமைத்திருக்கிறார்.

இந்தக் கூட்டணி ஆலோசனை மற்றும் செய்தியாளர் சந்திப்புக்காக சஹாரன்பூர் சென்றிருந்த ஓவைசி, அங்குள்ள சர்க்யூட் ஹவுஸில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதே நாளில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும் அதே சர்க்யூட் ஹவுஸுக்கு வரவிருந்திருக்கிறார். இதற்காக நீதிபதியை வரவேற்கக் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையுடன் தயாராக நின்று கொண்டிருந்திருக்கின்றனர்.
அப்போது, ஓவைசியின் கான்வாய் வாகனங்கள் சர்க்யூட் ஹவுஸ் வளாகத்திற்குள் நுழைந்தன. அவருடன் வந்த பாதுகாப்புப் படை வாகனங்களையும் அதிகாரிகளையும் பார்த்த பணியிலிருந்த காவலர்கள், வந்திருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதிதான் என நினைத்து, உடனடியாக அணிவகுப்பு மரியாதை செலுத்தியிருக்கின்றனர்.

தனக்குத்தான் மரியாதை அளிக்கப்படுகிறது என நினைத்த ஓவைசியும், காரிலிருந்து இறங்கி நின்று சிரித்த முகத்துடன் அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டு உள்ளே சென்றிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
வி.ஐ.பி-யைச் சரியாக அடையாளம் காணாமல், காவல்துறையினர் செய்த இந்தக் குளறுபடி குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb












