செய்திகள் :

``என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்ததால் விலை குறைந்தது" - தங்கம் விலை குறித்து பிரதமர் மோடி

post image

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர்ப் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு நெருக்கடி சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ``அந்நியச் செலாவணி அதிகம் செலவாகும் மற்றொரு முக்கியத் துறை தங்கம். தேச நலன் கருதி, ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதில்லை என நாம் உறுதி ஏற்க வேண்டும்," எனக் கூறியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதமும் அவசியமின்றித் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, கடந்த மே மாதம் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியதும் குறிப்பிடத்தக்கது. பிரதமரின் வேண்டுகோளைத் தொடர்ந்து நாட்டில் தங்கத்திற்கான தேவை பெருமளவில் குறைந்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. மத்திய அரசின் தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் அதிகாரப்பூர்வ தங்க இறக்குமதி சுமார் 40 சதவீதம் சரிந்துள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 41.24 பில்லியன் டாலராக இருந்த தங்க இறக்குமதி, தற்போது 24.78 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதேபோல், உலகத் தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் தங்கத்திற்கான தேவை முந்தைய ஆண்டை விட 29 சதவீதம் குறைந்து 162 டன்னாகப் பதிவாகியுள்ளது. இதில் ஆபரணத் தங்கத்திற்கான தேவை 20 சதவீதம் சரிந்து சுமார் 100 டன்னாகக் குறைந்துள்ளது.

மோடி

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில் அமைந்துள்ள இந்திரா காந்தி பிரதிஷ்டானில் நேற்று 5-வது தேசியத் திறன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``அவசியம் இல்லாவிட்டால் ஓராண்டுக்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். 1965-ம் ஆண்டு நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஒரு வேளை உணவைத் தவிர்க்குமாறு விடுத்த அழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

நமது நாடு இன்றும் அதே குணாதிசயத்தைக் கொண்டுள்ளது. என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு கேட்டதற்கு மக்கள் செவிசாய்த்தனர். அதனால் தங்கத்தின் விலை குறைந்தது. இன்று மக்கள் என்னிடம், 'மோடி ஜி, நீங்கள் சொன்னீர்கள், நாங்கள் உங்கள் அறிவுரையைக் கேட்டோம், அதனால் எங்கள் பணம் மிச்சமானது' என்று கூறுகிறார்கள்," எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்" - எடப்பாடி கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி பதில்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டிளியத்தார். அப்போது, அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்பு இருக்கின்றதா எனக்... மேலும் பார்க்க

புதிய மா., செ-க்ககள் லிஸ்ட்: பரிந்துரைத்த உதயநிதி, கனிமொழி; அதிருப்தியில் ஸ்டாலின் - பின்னணி என்ன?

திமுக-வில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என கட்சிக்குள் மாற்றம் கொண்டு வருவதற்கு பேசப்பட்டது. இந்த மாற்றம் தேர்தல் சமயத்தில் தேவையில்லாத சலசலப்புகளை கிளப்பும் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்... இருதலைக்கொள்ளி நிலையில் முதல்வர் விஜய்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் அனலைக் கிளப்பியிருக்கிறது. கடந்த காலங்களில் இந்த விவகாரத்தை எதிர்கொண்ட தி.மு.க அரசுக்கும், தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் த.வெ.க அரசுக்கும... மேலும் பார்க்க

‘அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களில் எஸ்.பி. வேலுமணியும் ஒருவர்’ - எடப்பாடி பழனிசாமி காட்டம்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டிளியத்தார். அப்போது பேசிய அவர், ”த.வெ.க அரசு கையாளாகாத அரசு. துளி முதலீடுகளை ஈர்க்கக்கூடிய சக்தி கூட இல்லை. ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் தோன்றிய `குப்பை மலை' - அகற்ற கோரும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி – திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், பாய்ச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் லுத்தரன் திருச்சபைக்கு முன்பு சாலையோரமே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. தேசிய ... மேலும் பார்க்க

’அமைச்சர் விஜய் பார்த்திபனிடம் `உன் வேலையை பார்த்துட்டு போ' என்றேன்; மெய்காப்பாளன் வேலையை.!’ – வைகோ

கோவை டாடாபாத் பகுதியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”விஜய் பார்த்திபன் அமைச்சரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. முதல்வரை ஒழுங்குபடுத்தி அழைத்துச... மேலும் பார்க்க