செய்திகள் :

காதல் விவகாரத்தில் சந்தேகம்; பள்ளி மாணவியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - நடந்தது என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம்,  சாயர்புரம் அருகிலுள்ள செபத்தையாபுரம், சோலைபுதூர்  வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன். இவரது  மகன் முத்துராஜ். இவர் செபத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.  இவரின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் 17 வயது மகள் செபத்தையாபுரத்தில் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு  படித்து வந்தார். மாணவியுடன் முத்துராஜுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

முத்துராஜா

இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், மாணவியின் பள்ளிப்படிப்பு முடிந்து, திருமண வயதை எட்டிய  பிறகு திருமணம் தொடர்பாக பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அம்மாணவி வேறொரு நபருடன் செல்போனில் பேசுவந்துள்ளாராம். இதனால், முத்துராஜாவிடம் பேசுவதை சமீப காலமாக தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த மாணவியிடம், முத்துராஜ் நேரில் பேச பல முறை முயன்றும் அவர் பேசவில்லையாம்.  இதனால்,  சந்தேகமடைந்த முத்துராஜ்,  அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.  இந்த நிலையில், இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  

இந்த நிலையில், மதியம் சுமார் 3 மணியளவில் மாணவியின் வீட்டுக்கு வந்த முத்துராஜ், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவியை கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.  மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். பின்னர் மாணவியை மீட்டு அவசர சிகிச்சைக்காக செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்த மாணவி

ஆனால், மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில்,  அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாயர்புரம் காவல் நிலைய போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அங்கிருந்து தப்பிய முத்துராஜ், விஷமருந்தி செபத்தையாபுரம் பேருந்து நிறுத்தத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பிளஸ் 1 மாணவி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்தச் சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை: நகைக்காக தாயைக் கொன்ற மகள் கைது - ஆண் நண்பரிடமும் போலீஸ் தீவிர விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்திருக்கும் தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் கீதா. இவரது கணவர் ரவி, லாரி ஓட்டுநராக சென்னையில் வேலைச் செய்து வருகிறார். இவர்களுக்கு சரண்யா, சுக... மேலும் பார்க்க

ரயில் பெட்டிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை... கொலை - தனியாகச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி நாகர்கோவில் வந்த பயணிகள் ரயிலில் ஹேண்ட்ப்ரேக் பழுதானதால் சரி செய்வதற்காக ரயில் நிலைய யார்டில் நிறுத்தி சரி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோட... மேலும் பார்க்க

நெல்லை: படிக்கட்டில் இறந்து கிடந்த சிசு; கர்ப்பத்தை மறைத்து இளம்பெண்ணுக்கு திருமணம் - நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகிலுள்ள அரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தாழையூத்து அருகிலுள்ள ஏரான்குடியைச் சேர்ந்த பிச்சம்மாள் என்பவருக்கும் கட... மேலும் பார்க்க

குமரி: சிறுமியை கடத்தி யாசகம் எடுக்க வைக்க முயன்ற தாய்மாமன் - அதிரடியாக கைது செய்த போலீஸார்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் குடும்பம் குடும்பமாக சுற்றி திரியும் யாசகர் சிலர் இரவு நேரம் குளச்சல் காவல் நிலையம் எதிரே செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் அருகே படுத்து தூங்குவது வ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பெண் உட்பட இருவர் வெட்டிக்கொலை - பட்டப்பகலில் நடந்தேறிய கொடூரம்!

திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தனியார் காலிமனை பகுதிக்கு பெண் ஒருவருடன் ஆண் ஒருவர் காரில் இன்று பிற்பகல் வேளையில் வந்தார். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர்கள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.700 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல் - பின்னணியில் பிரபல போதை மாஃபியா டீம்!

சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை முழுவ... மேலும் பார்க்க