பாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்: தேசிய செயற்குழுவில் சிறப்பு ...
பாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்: தேசிய செயற்குழுவில் சிறப்பு பொறுப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், நேற்று பாஜக இணைந்ததாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த அவருக்கு, பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அணியின் தேசிய செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக ஓபிசி அணியின் தேசியத் தலைவர் அமர் பால் மௌரியாவை சாஹல் நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ``பாஜக குடும்பத்தில் எனக்கு இடமும் மரியாதையும் அளித்ததற்காக மாண்புமிகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் ஓபிசி அணியின் தேசியத் தலைவர் அமர் பால் மௌரியா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
भाजपा परिवार में मुझे स्थान व मान-सम्मान देने के लिए आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी, आदरणीय गृहमंत्री श्री अमित शाह जी, भाजपा राष्ट्रीय अध्यक्ष श्री नितिन नवीन जी व ओबीसी मोर्चा के राष्ट्रीय अध्यक्ष श्री अमरपाल मौर्य जी का हार्दिक आभार प्रकट करता हूँ।
— Yuzvendra Chahal (@yuzi_chahal) November 21, 2026
அதைத் தொடர்ந்து, ஓபிசி அணியின் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பாக பா.ஜ.க-வின் ஓபிசி அணியின் தேசியத் தலைவர் அமர் பால் மௌரியா புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 37 தேசிய செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தேசியச் செயலாளர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. வரதராஜன் உட்பட ஏழு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் குஜராத்தின் தஷ்ரத்ஜி தாக்கூர், ஜார்க்கண்டின் சஞ்சீவ் குமார், ஹரியானாவின் சரிதா ஜாங்கிட், தெலங்கானாவின் கடகஞ்சி ரமேஷ், மத்தியப் பிரதேசத்தின் வைபவ் பன்வார் மற்றும் பீகாரின் பீம் குமார் சாஹு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb















