செய்திகள் :

ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியாவை முடக்க திட்டமிடும் சீனா" - அமெரிக்க ஆணையம் சொல்வது என்ன?

post image

அமெரிக்க நாடாளுமன்றத்தால் கடந்த 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது 'அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம்' (USCC). இந்த ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனது வருடாந்திர அறிக்கையை சமர்பிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடந்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, சீனா இந்தியாவின் ராணுவத் திட்டமிடலில் சிக்கல்களை ஏற்படுத்தியதோடு, இந்தியப் படைகளின் வளங்களை முடக்கி வைத்ததாக குறிப்பிட்டிருக்கிறது.

அமெரிக்கா
அமெரிக்கா

இந்த விவகாரம் தொடர்பாக அந்த அறிக்கையில், ``அமெரிக்கக் கூட்டணி அமைப்புக்கு வெளியே, சீனாவுடனான நீண்டகாலப் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில சக்திகளில் இந்தியாவும் ஒன்று. இதை சீனா நன்கு உணர்ந்துள்ளது. எனவே, பல்வேறு துறைகளில் இந்தியாவின் எழுச்சியைத் தடுக்க சீனா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுடன் சீனா வளர்த்து வரும் ராணுவக் கூட்டாண்மை, இந்தியாவுக்கு 'இருமுனைப் போர்' குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

கடந்த 2025 மே மாதம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது, சீனா நேரடியாகப் போரில் இறங்காமலேயே பாகிஸ்தானை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது. இது பாகிஸ்தானுடனான எதிர்கால மோதல்கள் எவ்வாறு உருவெடுக்கும் என்பது குறித்த இந்தியாவின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது. சீன உற்பத்தியை இந்தியா சார்ந்திருப்பது பெய்ஜிங்கிற்கு ஒரு முக்கிய ஆயுதமாகவும், அமெரிக்காவிற்கு வளர்ந்து வரும் பலவீனமாகவும் மாறியுள்ளது. தொழில்துறை உள்ளீடுகள், உபகரணங்கள், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை இந்தியாவுக்கு வழங்குவதை சீனா கட்டுப்படுத்தியுள்ளது.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

மேலும், சீனாவிலிருந்து வழங்கப்படும் பொருட்கள் அமெரிக்காவிற்கு மறுஏற்றுமதி செய்யப்படாது என்று சில இந்திய நிறுவனங்களிடம் சான்றிதழ் கோரியுள்ளது. அத்துடன், சீனாவின் விலை நிர்ணயக் கொள்கை இந்தியாவின் புதிய மருந்து உற்பத்தியைப் பாதித்துள்ளது. சீனாவிலிருந்து விநியோகச் சங்கிலிகளை இந்தியாவுக்கு மாற்றும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கும் இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடைந்து வரும் கடற்படை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள், அப்பகுதியில் இந்தியா நீண்டகாலமாகக் கொண்டிருந்த ஆதிக்கத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.

இது இந்தியப் படைகளுக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தென் சீனக் கடலில் கையாண்ட அதே தந்திரத்தை இந்தியப் பெருங்கடலிலும் சீனா தொடங்கியுள்ளது. வருங்காலத்தில் உரிமை கோருவதற்கு அடித்தளமிடும் வகையில், கடலுக்கடியில் உள்ள பகுதிகளுக்கு சீனா மறுபெயரிட்டு வருகிறது." என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் துயரில் நிற்கிறார்கள்"- உதயநிதி ஸ்டாலின்

"விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்" என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை வலியுறுத்திய... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்: தேசிய செயற்குழுவில் சிறப்பு பொறுப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், நேற்று பாஜக இணைந்ததாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த அவருக்கு, பாஜகவின் இதர பிற்படுத்தப்பட... மேலும் பார்க்க

``ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்" - எடப்பாடி கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி பதில்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டிளியத்தார். அப்போது, அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்பு இருக்கின்றதா எனக்... மேலும் பார்க்க

``என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்ததால் விலை குறைந்தது" - தங்கம் விலை குறித்து பிரதமர் மோடி

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர்ப் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு நெருக்கடி சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஹைதராபாத்தில் நட... மேலும் பார்க்க

புதிய மா., செ-க்ககள் லிஸ்ட்: பரிந்துரைத்த உதயநிதி, கனிமொழி; அதிருப்தியில் ஸ்டாலின் - பின்னணி என்ன?

திமுக-வில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என கட்சிக்குள் மாற்றம் கொண்டு வருவதற்கு பேசப்பட்டது. இந்த மாற்றம் தேர்தல் சமயத்தில் தேவையில்லாத சலசலப்புகளை கிளப்பும் ... மேலும் பார்க்க