அனிருத் - காவியா திருமண வரவேற்பு: பங்கேற்ற பல மாநில முதல்வர்கள் டு திரை நட்சத்தி...
BB 10: யாரும் எதிர்பாராத டபுள் எவிக்ஷன் - இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது யார் யார்?
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் 75 நாட்களைக் கடந்து விட்டது.
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் 19 பேர் கலந்து கொண்டனர்.
பத்தாம் ஆண்டு ஸ்பெஷல் என இந்த வருடம் ஷோ தொடங்கும் முன்பே எவிக்ஷனை நிகழ்த்தி அதிரடி காட்டினார் பிக்பாஸ். இதனால் ஷாக் ஆகி வெளியேறினர் ஷப்னம் உள்ளிட்ட சில போட்டியாளர்கள்.

அடுத்தடுத்த வார இறுதி எவிக்ஷனுக்கு பிறகு மிச்சமிருக்கும் போட்டியாளர்கள் டைட்டிலை நோக்கிய தங்கள் பயணத்தில் வேகம் காட்டி வருகின்றனர்.
ஜேசன், டிடிஎஃப் வாசன், லக்ஷ்மி பிரியா என பலருக்கும் அவர்களது ஆதரவாளர்கள் சமூக வலை தளங்களில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஷூட்டிங் நேற்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு எவிக்ஷனுக்கான நேரம் வந்தது.
எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தவர்கள் பதைபதைப்புடன் இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத ஒரு எவிக்ஷனை நிகழ்த்தினார் பிக்பாஸ்.
ஆம், இந்த வாரம் முகேஷ், சாத்விகா என இரண்டு பேரை வெளியேற்றி இருக்கிறார்.
கடந்த சில நாட்களாக இருவர் காம்பினேஷன் நிகழ்ச்சியில் பேசு பொருளாக இருந்தது நினைவிருக்கலாம்.

ஃபேமிலி ரவுண்ட் அப்-ல் இருவரின் பெற்றோர் வரும் போது என்ன பேசுவார்கள் என பி. பா ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த சூழலில் இருவரையும் வெளியேற்றி இருக்கிறார்கள்.
அடுத்தடுத்த வாரங்களில் என்ன நடக்கும்?
யார் டைட்டிலை வெல்ல போகிறார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அறிய இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.



















