செய்திகள் :

கார்த்திகை தீபம்: புதுக்கோட்டை கிராமச் சந்தையில் பாரம்பர்ய அகல் விளக்கு விற்பனை மும்முரம்!

post image

கார்த்திகை தீபம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது வீட்டு வாசல் முழுவதும் வரிசையாக ஏற்றப்படும் அழகான அகல் விளக்குகளும், அதில் ஒளிரும் தீபமும், அந்தத் தீபத்தைச் சுற்றியிருக்கும் மகிழ்ச்சியான சூழலும் தான் .அதுவும் கிராமப்புறங்களில் இந்த தீப திருநாளை தீபாவளிக்கு இணையாக கொண்டாடுவார்கள். கார்த்திகை தீபம் அன்று எண்ணிக்கையை நினைவு வைத்து தான் விளக்கு ஏற்றப்படும். இரட்டை படையில் விளக்கு ஏற்ற மாட்டார்கள். ஒற்றை படையில் தான் விளக்கு ஏற்றப்படும் .

தமிழர்களின் பாரம்பர்யத்தோடு இணைந்திருக்கும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா புதுப்பட்டி கிராம சந்தையில் மண் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கார்த்திகை மாதம் வந்தாலே வீடுகளைச் சுத்தம் செய்து, வாசலில் கோலம் போட்டு, அதன் ஓரங்களில் அழகாக அகல் விளக்குகளை ஏற்றுவது வழக்கம். அந்த விளக்குகளுக்காகவே புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா புதுப்பட்டி கிராம சந்தையில் மண்பாண்டத் தொழிலாளர்கள் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் மண் விளக்குகளைத் தயாரித்து வருகின்றனர்.

மண் விளக்குகள் உருவாகும் பணியே தனி கலை. மண்ணைத் தேர்வு செய்வது முதல் அதனைப் பதப்படுத்தி, தேவையான வடிவில் விளக்குகளாக உருவாக்குவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் கவனம் தேவைப்படுகிறது. உருவாக்கப்பட்ட விளக்குகளை நன்றாக உலர வைத்து, பின்னர் தேவையான முறையில் தயார் செய்து விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.

சிறிய அகல் விளக்குகள் முதல் அதிக எண்ணிக்கையில் தீபம் ஏற்றுவதற்கான விளக்குகள் வரை பல வகைகள் புதுப்பட்டி கிராம சந்தையில் கிடைக்கின்றன. சில விளக்குகள் எளிமையாகவும், சில விளக்குகள் அழகிய வடிவங்களுடனும் காணப்படுகின்றன

கார்த்திகை தீப நாளில் வீட்டு வாசலில் வரிசையாக அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது தமிழர்களின் முக்கியமான பாரம்பரியங்களில் ஒன்று. மாலை நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்படும்போது, அந்தப் பகுதியே தீப ஒளியில் அழகாகக் காட்சியளிக்கும்.

மின்விளக்குகள், நவீன அலங்கார விளக்குகள் என பல மாற்றங்கள் வந்தாலும், மண் அகல் விளக்குகளுக்கான வரவேற்பு இன்றும் குறையவில்லை. பாரம்பர்யத்தைப் பின்பற்ற விரும்பும் பலரும் கார்த்திகை தீபத்திற்காக மண் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர்.

ஒரு விளக்கின் பின்னால் பல கைகளின் உழைப்பு இருக்கிறது.

சந்தையில் விற்பனைக்காக குவிந்து கிடக்கும் ஒவ்வொரு விளக்கின் பின்னாலும் மண்பாண்டத் தொழிலாளர்களின் உழைப்பு இருக்கிறது. மண்ணை கைகளால் வடிவமைத்து, அதனை அழகான அகல் விளக்காக மாற்றும் இந்தத் தொழில் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.

கார்த்திகை தீபம் மக்களின் வீடுகளில் ஒளியை ஏற்றும் அதே நேரத்தில், இந்த பாரம்பர்ய மண் விளக்குத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் ஒளி தருகிறது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா; சுவாமி, அம்பாள் வெள்ளி சிம்மாசனத்தில் வலம்!

திருக்கார்த்திகை தீபத்திருவிழாதிருக்கார்த்திகை தீபத்திருவிழாதிருக்கார்த்திகை தீபத்திருவிழாதிருக்கார்த்திகை தீபத்திருவிழாதிருக்கார்த்திகை தீபத்திருவிழா மேலும் பார்க்க

மதுரை: காகிதங்களில் காத்திருக்கும் அறிவு... வாசகர்களை வரவேற்கும் புத்தகத் திருவிழா! | Photo Album

புத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழாபுத்தகத் திருவிழாபுத்தகத் திரு... மேலும் பார்க்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் விழா! லட்சக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் விழா! லட்சக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம்! மேலும் பார்க்க

சூரன் வீழ்ந்தான்... அறம் வென்றது! பழமுதிர்ச்சோலையில் வேலவனின் வீரத்திருவிழா!

பழமுதிர்ச்சோலையில் சூரசம்ஹாரம்பழமுதிர்ச்சோலையில் சூரசம்ஹாரம்பழமுதிர்ச்சோலையில் சூரசம்ஹாரம்பழமுதிர்ச்சோலையில் சூரசம்ஹாரம்பழமுதிர்ச்சோலையில் சூரசம்ஹாரம்பழமுதிர்ச்சோலையில் சூரசம்ஹாரம்பழமுதிர்ச்சோலையில் ச... மேலும் பார்க்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா! கழுகு பார்வை காட்சிகள்.!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா! கழுகு பார்வை காட்சிகள்.! மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சி திருக்கோயில் கோலாட்ட உற்சவம் 5ம் நாள் மரசிம்மாசனம்! | Photo Album

கோலாட்ட உற்சவம்-5ம்_நாள்-மரசிம்மாசனம்கோலாட்ட உற்சவம்-5ம்_நாள்-மரசிம்மாசனம்கோலாட்ட உற்சவம்-5ம்_நாள்-மரசிம்மாசனம்கோலாட்ட உற்சவம்-5ம்_நாள்-மரசிம்மாசனம்கோலாட்ட உற்சவம்-5ம்_நாள்-மரசிம்மாசனம்விருதுநகர் மாவட... மேலும் பார்க்க