செய்திகள் :

`ஓடும் ரயிலில் ரூ.208 கோடி மதிப்பிலான பொருள்கள் கொள்ளை' - வீடியோ எடுத்து பகிந்துகொண்ட கொள்ளையர்கள்!

post image

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஓடும் சரக்கு ரயில்களைத் திட்டமிட்டு மறித்து, சுமார் 22.5 மில்லியன் டாலர் (ரூ.208 கோடி) மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்ததாக 14 பேர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மெகா கொள்ளைச் சம்பவம் குறித்து CNN ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதிக மதிப்புள்ள பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களை இந்தக் கும்பல் குறிவைத்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாங் பீச் துறைமுகங்கள் வழியாக அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் பிராண்டட் காலணிகள் (Sneakers), மின்சாரக் கருவிகள் (Power tools) உள்ளிட்ட பொருட்களை இவர்கள் கொள்ளையடித்து கள்ளச்சந்தையில் விற்று வந்துள்ளனர். தெற்கு கலிபோர்னியாவின் பிகோ ரிவேரா (Pico Rivera) மற்றும் புல்லர்டன் (Fullerton) உள்ளிட்ட ரயில் வழித்தடங்களில் இந்தக் கொள்ளைத் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் தண்டவாளப் பகுதிகளுக்குச் சென்று, ஓடும் ரயில்களில் ஏறி அதன் தொழில்நுட்பத்தைச் செயலிழக்கச் செய்துள்ளனர். இதனால் ரயில்கள் அவசரகால அடிப்படையில் நடுவழியில் நிறுத்தப்படும்போது, அதில் இருந்த சரக்குகளைத் தங்களது வாகனங்களில் ஏற்றி ரகசியக் கிடங்குகளில் (Stash houses) பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். கொள்ளையடித்த விவரங்களைக் குற்றவாளிகள் தங்களது 'குரூப் சாட்' (Group chats) மூலமாகப் பகிர்ந்து கொண்டதுடன், கொள்ளையடிக்கும் காட்சிகளைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பலுக்கு 21 வயது இளைஞர் ஒருவர் தலைமையேற்று நடத்தியுள்ளார். அவருடன் 23 முதல் 38 வயதுக்குட்பட்ட 13 பேர் கூட்டாளிகளாகச் செயல்பட்டுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து அமெரிக்க வழக்கறிஞர் பில் எஸேலி கூறுகையில், "இந்தக் கொள்ளையின் அளவு அதிர்ச்சியளிக்கிறது. ரயில்களைச் சூறையாடுபவர்கள் மீதும், திருடப்பட்ட பொருட்களைத் தெரிந்தே வாங்கிப் பணமாக்குபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் வியாழக்கிழமையன்று லாஸ் ஏஞ்சல்ஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சதித்திட்டம் தீட்டியதற்காக 5 ஆண்டுகளும், ஒவ்வொரு திருட்டு வழக்கிற்கும் தலா 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ரயில் போக்குவரத்திற்கு எதிரான வன்முறைப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 14 மாத கால தீவிர விசாரணைக்குப் பிறகு இந்தக் கும்பல் பிடிபட்டுள்ளதை வரவேற்றுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட வழக்கறிஞர் நாதன் ஜே. ஹோச்மேன், "பொருட்களைத் திருடுபவர்களை மட்டுமின்றி, அதன் மூலம் லாபம் ஈட்டுபவர்களையும் ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதே எங்களது நோக்கம். விநியோகச் சங்கிலியைப் பாதுகாத்து, பொருட்கள் கள்ளச்சந்தைக்குச் செல்லாமல் உரிய இடத்திற்குச் செல்வதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து 2 திருமணங்கள்; நகை, பணம் மோசடி; தலைமறைவான இளம்பெண் - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவருக்கும் கடந்த 13.09.2026 அன்று தஞ்சாவூர்... மேலும் பார்க்க

ஈரோடு: பள்ளி மாணவிகள் 4 பேருக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் கைதான சமூக அறிவியல் ஆசிரியர்!

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் 45 வயதான விஜயசாரதி. ஈரோட்டில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் சமூக அறிவியல் ஆசிரியராயாக பணியாற்றி வந்திருக்கிறார். பள்ளியில் பயிலும் 13 வயது மாணவிகள் நால... மேலும் பார்க்க

"என் சாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ தான் காரணம்"- கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த டிரைவர்!

கன்னியாகுமரி அருகே வட்டக்கோட்டை - பால்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சுதாகர். லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த... மேலும் பார்க்க

`புதுக் காதலனுடன் தனிமையில் சந்தித்ததால் ஆத்திரம்’ - திருப்பத்தூர் இரட்டைக் கொலையில் `திடுக்’ தகவல்

திருப்பத்தூர் மாவட்டம், திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திரு.வி.க நகரைச் சேர்ந்த மாலினி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் சந்தேகம்; பள்ளி மாணவியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகிலுள்ள செபத்தையாபுரம், சோலைபுதூர் வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன். இவரது மகன் முத்துராஜ். இவர் செபத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டற... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: நகைக்காக தாயைக் கொன்ற மகள் கைது - ஆண் நண்பரிடமும் போலீஸ் தீவிர விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்திருக்கும் தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் கீதா. இவரது கணவர் ரவி, லாரி ஓட்டுநராக சென்னையில் வேலைச் செய்து வருகிறார். இவர்களுக்கு சரண்யா, சுக... மேலும் பார்க்க