செய்திகள் :

”காவிரி நீரை பெறுவதில் தவெக அரசு மெத்தனம்; முதல்வர் விஜய் வாய்திறப்பதில்லை”- எடப்பாடி பழனிசாமி!

post image

தஞ்சாவூரில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் எடப்பாடி பானிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு, டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான நீரை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்காததால், குறுவை சாகுபடி பாதிப்பை சந்தித்தது.

எடப்பாடி பழனிசாமி

முதல்வர் விஜய் மேட்டூர் அணைக்கு சென்று, 45 நாளுக்கு தண்ணி திறக்கப்படும் என அறிவித்து, தண்ணீரை திறந்தார். ஆனால், 45 நாள்களுக்கு தண்ணீர் போதது. சம்பா விளைச்சல், முழுமை பெற வேண்டும் என்றால், ஜனவரி இறுதி வரை, காவிரியில் தண்ணீரை விட வேண்டும். ஆனால் 45 நாள்களுடன் தண்ணீரை நிறுத்தி விட்டார்கள். அத்துடன் மேட்டூர் அணையில், 61 அடி தான் தண்ணீர் தான் உள்ளது. இது மே மாதம் குடிநீர் தேவைக்கே போதாது.

த.வெ.க அரசு, காவிரி நதி நீர் சம்பந்தமான பிரச்னையில், கவனம் செலுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் இவ்வளவு டி.எம்.சி தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவு போட்டார்கள். அந்த உத்தரவின்படி தண்ணீரை பெறுவதற்கான முயற்சியை த.வெ.க அரசு எடுக்கவில்லை. முதல்வர் விஜய் தனி அக்கறை செலுத்தி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே, அ.தி.மு.க பெற்று தந்த தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்தாத, கையாளாகாத அரசாக த.வெ.க அரசு உள்ளது.

மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என கர்நாடக முதல்வர் சிவக்குமார் கூறி வருகிறார். ஆனால், நமது முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார். இதற்கு எந்த பதிலும் கிடையாது. இதனால், விவசாயிகள் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளனர். விவசாயிகளின் அச்சத்தை போக்கும் விதமாக, மேகதாது அணை குறித்து, முதல்வர் விஜய் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கீழ்படுகை மாநிலத்தின் அனுமதி இல்லாமல், மேல்படுகை மாநிலத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, எந்த ஒரு கட்டுமானத்தையும் தொடங்கக் கூடாது. தண்ணீரை தேக்கக் கூடாது என்ற தீர்ப்பை அ.தி.மு.க பெற்று தந்துள்ளது. அதை நடைமுறைப்படுத்தவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் 11 டி.எம்.சி., தண்ணீரை திறக்க உத்தரவிட்டும், திறக்கவில்லை. இது தொடர்பான தமிழக அரசின் வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த அளவுக்கு இவர்களின் நிர்வாகம் உள்ளது. சரியான வாதத்தை எடுத்து வைக்கவில்லை. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

இடமலக்குடி: கேரளாவின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்து; நிதி இல்லாமல் முடங்கிய அவலம்!

கேரள மாநிலத்தின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்தான இடுக்கி மாவட்டம் இடமலக்குடி பஞ்சாயத்து, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி முற்றிலும் முடங்கியுள்ளது. ஒருபுறம் 6 மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளமில்லை; மற... மேலும் பார்க்க

`கள்ளக்குறிச்சி MLA ஆபாச தகவல் அனுப்பியது பணியிட துன்புறுத்தல் இல்லையா?' - நீதிபதி விக்டோரியா கௌரி

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ... மேலும் பார்க்க

கொளத்தூர்: வி.எஸ்.பாபு மறைவு... தொகுதியை `காலி'யாக அறிவித்த சட்டப்பேரவைச் செயலகம்!

தவெக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபு (75) காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில்... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்ற நீதிபதி என நினைத்து ஓவைசிக்கு சல்யூட்; உ.பி போலீஸின் குளறுபடி! நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அளிக்கப்பட வேண்டிய காவல்துறை அணிவகுப்பு மரியாதையை, அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி... மேலும் பார்க்க

காவிரி: "வாடும் சம்பா பயிர்கள்; ஏக்கருக்கு ரூ 40000 வழங்க வேண்டும்"- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

"டெல்டா மாவட்டங்களில் வாடும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக போராடி வரும் நிலையில், அவர்களின் துயரங்களைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வல... மேலும் பார்க்க

செக்கானூரணி காவல் நிலைய மரணம்: "முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் காப்பார்?"- கனிமொழி

மதுரை வாலாந்தூரில் லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42), நவம்பர் 14-ம் தேதி அதிகாலை காவல் நி... மேலும் பார்க்க