செய்திகள் :

"யாராவது என் குடும்பத்தைப் பற்றிப் பேசினால் எனக்கு பிடிக்காது, அப்போது நான்.!"- ராஷ்மிகா மந்தனா

post image

பொது வாழ்வில் இல்லாத தனது குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் 'மைசா'. இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'மைசா'
'மைசா'

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வரும் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டபோது ராஷ்மிகா மந்தனா தன் குடும்பத்தினர் மீது எழும் விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

பேட்டி ஒன்றில் பேசிய அவர், " யாராவது என் குடும்பத்தைப் பற்றிப் பேசினால், எனக்கு அது பிடிக்காதது. நான் முழுமையான வாரியார் மோடுக்கு மாறிவிடுவேன். நான் முழுக்க முழுக்க 'மைசா' போல மாறிவிடுவேன். என் குடும்பத்தினர் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்காததால் அவர்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசுவது எனக்கு பிடிக்காது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

அவர்கள் பொது வாழ்வில் இருப்பவர்கள் கிடையாது. எனவே, பொது வாழ்வில் இல்லாத ஒருவரின் பெயரை இழுக்கும்போதோ அல்லது அவர்களின் ஆளுமைக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிக்கும்போதோ சரியான விஷயம் கிடையாது. தன்னைப் பற்றிய விமர்சனங்களை 'தொழில்சார் சவாலாக' கடந்து விடுகிறேன். ஆனால் என் குடும்பத்தினரைச் சம்பந்தப்படுத்திப் பேசும்போது எல்லை மீறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

OM: "மும்பையில் மெடிக்கல் இண்டர்ஷிப்; அதனால்தான்..." - ஶ்ரீலீலா

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். O.M Movieகடந்த சில... மேலும் பார்க்க

"நாங்கள் திருமண உறவில்தான் இருக்கிறோம்!" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநருமான கிருஷ்ண வம்சியும் பிரிந்துவிட்டதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது அதற்கு... மேலும் பார்க்க

AOT: "ஒரு பெரிய நட்சத்திரத்தின் மகனாக இருந்தபோதிலும்..." - துல்கர் சல்மான் பற்றி அல்லு அர்ஜுன்

டோலிவுட் இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஸ்ருதி ஹாசன், சாத்விகா வீராவல்லி ஆகியோர் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ... மேலும் பார்க்க

"அப்படித்தான் படங்களை புரொமோட் செய்கிறார்கள்; ஆனால் அவையெல்லாம் ஹிட் ஆகிறதா?" - நாகர்ஜுனா

மகேஷ் உப்பாலா இயக்கத்தில், அறிமுக நடிகர் அனீஷ், நடிகை அனஸ்வர ராஜன் நடித்துள்ள 'இட்லு அர்ஜுனா' திரைப்படம் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனீஷ், டோலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் ரெட்டிய... மேலும் பார்க்க

Ram Charan: "அதையே ஒரு தாய் செய்யும்போது ஏன் யாரும் கைதட்டுவதில்லை?" - ராம்சரணின் மனைவி உபாசனா

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'சி.ஐ.ஐ பார்ட்னர்ஷிப்' மாநாட்டில் ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷுடன் உரையாடிய நடிகர் ராம் சரணின் மனைவியும், தொழிலதிபருமான உபாசனா கொனிடேலா, குழந்தை வளர்ப்பு தொடர்பாகப்... மேலும் பார்க்க

Pawan Kalyan: "நல்ல நண்பர்களாகத் தொடர்வோம்" - பிரிவை அறிவித்த பவன் கல்யாண் - அன்னா

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் 1997-ல் நந்தினி என்பவரைத் திருமணம் செய்து 1999-ல் பிரிந்தார். பின்னர் 2009-ல் நடிகை ரேணு தேசாயைத் திருமணம் செய்தார். இவர... மேலும் பார்க்க