செய்திகள் :

'ஆபத்தை சமாளிக்க...' - ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்! - காரணம் என்அன?

post image

தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் தன்னுடைய முகாம் அலுவலகத்தில் நடத்தவிருக்கிறார்? இந்த திடீர் கூட்டத்தின் பின்னணி என்ன?

TVK Vijay | த.வெ.க - முதல்வர் விஜய்
TVK Vijay | த.வெ.க - முதல்வர் விஜய்

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தவெக 108 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. பெரும்பான்மையை பெற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றே ஆட்சியமைத்தது.

தவெக ஆட்சியமைந்து 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் கட்சியினர் தவெக அரசோடு இணக்கமாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்டுகள் அரசோடு முரண்பட்டுக் கொண்டே இருந்தனர். மேலும், இடைத்தேர்தலிலும் தனியாக வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில்தான், இன்று மதியம் 2 மணியளவில் க்ரீன்வேஸ் சாலையிலுள்ள தன்னுடைய முகாம் அலுவலகத்தில் ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை சந்தித்து முதல்வர் பேசவிருக்கிறார்.

TVK Vijay
TVK Vijay

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய தவெகவின் அமைச்சர்கள் சிலர், 'ஆட்சி முடிந்து 6 மாதம் ஆகியிருக்கிறது. நாங்கள் ஆட்சியமைப்பதற்கே சிரமமான சூழல் நிலவியது. அப்போது இந்தக் கட்சிகள்தான் தக்க சமயத்தில் கைகொடுத்து பேருதவி புரிந்தன. அதற்காக முதல்வரே அவர்களின் கட்சி அலுவலகங்களுக்கு தேடிச் சென்று நன்றி கூறினார். 'எல்லாரும் இணைந்து பயணிப்போம். உங்களின் ஆலோசனைகள் எங்களுக்கு எப்போதும் தேவை' எனவும் கூறியிருந்தார்.

ஆனால், இந்த 6 மாதத்தில் பிரதமர் யார் என்ற விவகாரத்தில் காங்கிரஸூடனும் இன்னும் பல விஷயங்களில் கம்யூனிஸ்ட்டுகளுடனும் முரண்பாடு ஏற்பட்டது. இப்போது ஆட்சி 6 மாதங்களை கடந்திருக்கிறது. இந்த சமயத்தில் ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை அழைத்து நன்றி கூறி நட்புரீதியாக உரையாட திட்டமிட்டிருக்கிறார் முதல்வர். 'மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். தொடர்ந்து நாம் இணைந்தே பயணிப்போம்' என நம்பிக்கையளிக்கும் வகையில் பேசவிருக்கிறார்' என்றனர்.

பத்து நாளைக்கு முன்பாக முதல்வர் இதேமாதிரி தவெக எம்.எல்.ஏக்களை மட்டும் தனியாக அழைத்துப் பேசி நன்றி கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார். 'நம்பிக்கையில்லா தீர்மானம்' எனும் ஆபத்தை எதிர்க்கட்சிகள் வீசினால் அதை சமாளிப்பதற்காகவே இப்படி அடுத்தடுத்த கூட்டங்களை முதல்வர் நடத்துகிறார் என்கின்றனர்.

Bisleri: "2025-ம் ஆண்டு மாதிரி அது; இன்னொரு சோதனையில் சரியாக தான்.!" - நிறுவனம் சொல்லும் விளக்கம்

பிஸ்லரி தண்ணீர் பாட்டிலில் 'புரோமேட் மற்றும் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்' இருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், பிஸ்லரி தண்ணீர் ... மேலும் பார்க்க

'மாவட்டச் செயலாளரா... வி.எஸ் பாபுவின் மகனா?' - கொளத்தூரில் யாரை நிறுத்தப் போகிறார் விஜய்?

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமாகி சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இடைத்தேர்தலுக்கு முதல்வர் விஜய் யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறார் எனும் பேச்சு பனையூர் முகாமில் எழத் தொடங்கியிருக்கிறது. TVK... மேலும் பார்க்க

"ஏழைகளிடம் பணத்தைக் கொடுத்தால் போதும், வறுமை சரியாகிவிடும் என்று.!" - நிர்மலா சீதாராமன் கட்டுரை

'வறுமைக்கு எதிரான போரில் இந்தியா வென்ற தசாப்தம்' என்கிற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லிங்க்ட் இன் பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார்.முழுக் கட்டுரை:ஓராண்டுக்கு முன்பு, நாகாலாந்தின் தொ... மேலும் பார்க்க

அமெரிக்க பங்குச்சந்தை சரிவு, ஈரான் தாக்குதல்: ஜனநாயகக் கட்சி மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

மிட் டேர்ம் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...“நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்கள் குறித... மேலும் பார்க்க

ஆட்சி அமைக்க மீண்டும் அழைப்பு விடுத்த காடி ஐசன்கோட்; நெதன்யாகு கட்சியின் நிபந்தனைகள் என்னென்ன?

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றுள்ள முன்னாள் ராணுவத் தளபதியும் 'யஷார்' (Yashar) கட்சித் தலைவருமான காடி ஐசன்கோட், இடைக்காலப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' (Likud)... மேலும் பார்க்க