செய்திகள் :

குறைந்த தங்கம் விலை: மோடி தான் இதற்கு காரணமா... கச்சா எண்ணெய் விலையை மாற்றினாரா ட்ரம்ப்?!

post image

தங்கம் விலை 10 நாள்களில் கிட்டத்தட்ட ரூ.13,000 சரிந்து, ரூ.91,720 வரையில் இறங்கியது.

தங்கம் விலை இறக்கம் குறித்து இந்தியப் பிரதமர் மோடி, “நான் ஓராண்டிற்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்திய மக்களிடம் கூறினேன். அதே மாதிரி, மக்களும் குறைவாகத் தங்கத்தை வாங்கினீர்கள். இதனால், தங்கம் விலை குறைந்துள்ளது” என்று நேற்று முன்தினம் (நவம்பர் 21) பேசியிருந்தார்.

மத்தியில் தான் இப்படி என்று பார்த்தால், மாநிலம் பக்கம் வந்தால் தமிழ்நாட்டில், ‘முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்ததால் தான் தங்கம் விலை குறைந்துள்ளது’ என்று சோஷியல் மீடியா மீம்கள், போஸ்ட்டுகளைப் பார்க்க முடிந்தது.

தங்கம்
தங்கம்

சரி... தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இந்தப் பேச்சுகள் என்று நினைத்தால், அமெரிக்கா பக்கம் சென்றால், அங்கு அந்த நாட்டு அதிபர் கச்சா எண்ணெய் விலைக் குறைவதை வேறு கோணத்தில் கூறிக்கொண்டிருக்கிறார்.

நேற்று (அமெரிக்க நேரப்படி) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில்,

“ஜனநாயகக் கட்சியினரும் ஈரானும் இணைந்து, எண்ணெய் விலையை முடிந்தவரை உயர்த்திப் பிடிக்கக் கடுமையாகப் போராடினார்கள். ஆனால், தேர்தலுக்குப் பிறகு எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்குக் குறைந்துள்ளது.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்பே இதைப் புரிந்துகொள்ளாமல் போனது வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், உண்மையில் தங்கம், கச்சா எண்ணெய் குறைந்ததற்கு என்ன காரணம் என்பதைக் கொஞ்சம் ஆராயப் பார்ப்போம்.

2025-ம் ஆண்டு தங்கம் விலை தொடர்ந்து புதிய புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டே வந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம்கூட, தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.1.34 லட்சத்தைத் தொட்டது.

அதன் பிறகு, அவ்வளவாக ஏற்றமும், இறக்கமும் காணாத தங்கம் விலை, பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, சறுக்கத் தொடங்கியது. இதற்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வு மிக முக்கிய காரணம்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

தங்கம், கச்சா எண்ணெய் - இரண்டிற்கும் இந்தியா பிற நாடுகளையே சார்ந்திருக்கிறது. ஈரான் போர் தொடங்கியதும், கச்சா எண்ணெய் விலை மளமளவென உயரத் தொடங்கியது.

இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. இன்னொரு பக்கம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறுவதைத் தொடர்ந்தார்கள்.

இதனால், இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி மிகவும் தேவையாக இருந்தது. இதனால், கடந்த மே மாதம், மோடி இந்திய மக்களிடம் ஓராண்டிற்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். ஈரான் போர் தீவிரமாக இருந்ததே அந்தச் சூழல்களுக்குக் காரணம்.

கடந்த நவம்பர் 3-ம் தேதி, அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற்றது. ஈரான் போரின் தாக்கத்தினால், அமெரிக்க மக்கள் ட்ரம்பின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மையைத் தந்துவிட்டார்கள். இதனால், ட்ரம்ப் கடும் அப்செட்.

நவம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு, ஈரான் போரைப் பெரிதாக முன்நகர்த்தவில்லை ட்ரம்ப். இதனால், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆக, இதில் ட்ரம்பிற்குத் தனிப்பட்ட பங்கு எதுவும் இல்லை.

தங்கம் விலைக்கு வந்தால், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் மட்டும் தங்கம் விலை குறையவில்லை. உலகம் எங்கிலுமே தங்கம் விலை குறைந்துதான் உள்ளது.

தங்கம்
தங்கம்

தங்கம் விலை என்பதோ மத்திய அரசிற்கோ, மாநில அரசிற்கோ கட்டுப்பட்டது இல்லை. இது சர்வதேச சந்தையைச் சார்ந்தது. இதனால், இதற்கான கிரெடிட்டை இங்கு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது.

தங்கம் விலை ஏன் குறைகிறது என்று பார்த்தால், உலக நாடுகளில் பணவீக்க அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை ஏற்றியுள்ளன. இன்னமும் ஏற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

தங்கம் என்பது வட்டி தராத முதலீடு. வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால், தங்கத்தைத் தாண்டி வட்டித் தரும் முதலீடுகள் பக்கம் முதலீட்டாளர்கள் சென்றுள்ளனர். இதனால்தான் தங்கம் விலை குறைந்தது.

ஆக, இது சந்தை சார்ந்த மாற்றமே தவிர, அரசுகள் சார்ந்த விலை மாற்றம் இல்லை இது.

Gold: 10 நாள்களில் ரூ.13,900 குறைந்த தங்கம் விலை; சறுக்கலுக்கு என்ன காரணம்?

சென்னையில் கடந்த நவம்பர் 10-ம் தேதியிலிருந்து (கிட்டத்தட்ட 10 நாள்களில்) தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த நவம்பர் 10-ம் தேதி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,210-க்கும்,... மேலும் பார்க்க

Rhenium: `உங்கள் 916 தங்கம் உண்மையிலேயே 916 தானா?' அதிர்ச்சி தரும் கலப்படம் - ரினியம் என்றால் என்ன?

நீங்கள் ஆசையாக வாங்கும் 22 காரட் தங்க நகைகள், உண்மையிலேயே 22 காரட் தூய்மையானவைதானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது சமீபத்திய புலனாய்வு அறிக்கை ஒன்று. தங்கத்துடன் 'ரினியம்' (Rhenium) என்ற உலோகத் தூளைக் கல... மேலும் பார்க்க

விசேஷங்களில் தங்க நகை Gift வருதா? ஆல்பமும், மொய் புக்கும் ரெடியாக வைத்துக்கொள்ளுங்க!

நம் இந்தியக் குடும்பங்களில் ‘ஒரு குண்டுமணி தங்கமாவது’ கண்டிப்பாக இருக்கும். இதில் பலரின் வீட்டில் பவுன் கணக்கில் தங்க நகைகள் இருக்கும். இன்னும் சிலர் வீட்டில் கிலோ கணக்கில் தங்கமும், தங்க நகைகளும் இரு... மேலும் பார்க்க

'14 மாதங்களில் இல்லாத சரிவு' சென்னையில் ஒரு பவுன் ரூ.95 ஆயிரம்! தங்கம் விலை குறைய காரணங்கள் என்ன?

இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.235-உம், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1,880-உம் குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.95,840-க்கும் விற்பனை... மேலும் பார்க்க

Gold: ரூ.97,720-க்கு சறுக்கிய தங்கம் விலை; 2027-ம் ஆண்டு விலை என்னவாகும்? - நிபுணர் விளக்கம்

தங்கம் விலை நல்ல இறக்கத்தைக் கண்டு வருகிறது. இன்று சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.255 குறைந்து ரூ.12,215-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.2,040 குறைந்து ரூ.97,720-க்கு விற்பனையாகி ... மேலும் பார்க்க

Gold: ரூ.1 லட்சத்திற்கு கீழ் இறங்கிய தங்கம் விலை; 'இதற்கும்' கீழிறங்கினால் கிடுகிடு சறுக்கல்!

இன்று சென்னையில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்குக் கீழ் குறைந்துள்ளது.இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12,470-க்கும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.99,760-க்கும் விற்பனையாகி வருகிறது.... மேலும் பார்க்க