செய்திகள் :

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 'பவர்' யார்? 3-வது இடத்தில் இந்தியா; சறுக்கிய ட்ரம்ப்.. செக் வைத்த சீனா

post image

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அதிகாரக் களத்தில் யார் கரம் ஓங்கியிருக்கிறது என்பதை ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சர்வதேச கொள்கை ஆய்வு நிறுவனமான ‘லோவி இன்ஸ்டிடியூட்’ (Lowy Institute), தனது '2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்' (Asia Power Index 2026) அறிக்கையை வெளியிட்டு சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா தனது 3-வது இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இடைவெளி வரலாறு காணாத அளவுக்குச் சுருங்கியிருப்பதுதான் இந்த ஆண்டின் ஹாட் டாபிக்!

அமெரிக்கா, சீனா!

அமெரிக்கா Vs சீனா: குறைந்த இடைவெளி!

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பொருளாதாரம், ராணுவ பலம், ராஜதந்திர செல்வாக்கு உள்ளிட்ட 8 முக்கிய அளவுகோல்களின் கீழ், 131 குறியீடுகளைக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்கா 78.9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சீனா: 73.6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா: 40.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது (கடந்த ஆண்டை விட 0.5 புள்ளிகள் அதிகம்). ஜப்பான்: 38.6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

2018-ம் ஆண்டு இந்தக் குறியீடு தொடங்கப்பட்டதிலிருந்து இல்லாத அளவிற்கு, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 5.3 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ராணுவத் திறனிலும் சீனா, அமெரிக்காவின் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு நெருங்கிவிட்டது.

மோடியின் 'பிராந்திய' பாய்ச்சலும், 'உலகளாவிய' சறுக்கலும்!

இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவின் ஒட்டுமொத்த அதிகாரம் நம்மை விட அதிகமாக இருந்தாலும், 2018-க்குப் பிறகு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அதிகார இடைவெளி மிகக் குறைந்த அளவிற்குச் சுருங்கியிருப்பது ஆறுதலான விஷயம்.

பிராந்தியத் தலைமைத்துவ மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக ஆசியாவின் 2-வது செல்வாக்கு மிக்க தலைவராக முன்னேறியுள்ளார். ஆனால், ஒரு சின்ன 'ட்விஸ்ட்'டும் இருக்கிறது. வளைகுடா போரின் போது ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்த சம்பவத்திற்கு இந்தியா மென்மையான எதிர்வினையாற்றியது போன்ற காரணங்களால், மோடியின் உலகளாவிய தலைமைத்துவம் மற்றும் ராஜதந்திர லட்சியம் குறித்த பார்வைகளில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவின் 'பிளஸ்' மற்றும் 'மைனஸ்' என்ன?

 ராஜதந்திர பலம்: பெரும்பாலான நாடுகள் தடுமாறிய ஆண்டிலும், இந்தியா தனது ராஜதந்திர செல்வாக்கில் 70.3 புள்ளிகளுடன் கம்பீரமாக நிற்கிறது.

 பாதுகாப்பு & வர்த்தகம்: தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம் பாதுகாப்புக் கூட்டமைப்பில் இரண்டு இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும் (18.6 புள்ளிகள்), பிராந்திய வர்த்தக உறவுகளில் இரண்டு இடங்கள் முன்னேறி 7-வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது. கலாசாரச் செல்வாக்கு 43.8 புள்ளிகளாகவும், எதிர்கால வளங்கள் 56.2 புள்ளிகளாகவும் உள்ளன.

 பொருளாதாரச் சவால்: பொருளாதாரத் திறன் புள்ளிகள் 26.4 ஆகச் சற்று சரிந்துள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணக்கீட்டு முறை மாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் ஏற்பட்ட சுமார் 20 பில்லியன் டாலர் சரிவு ஆகியவை நமது ஒப்பீட்டு ஜி.டி.பி (GDP) நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி

சீனா வளரவில்லை... அமெரிக்காதான் சறுக்கியது!

இந்த அறிக்கையின் மிக முக்கியமான கவனிப்பு இதுதான்: சீனாவின் அபரிமிதமான வளர்ச்சியை விட, அமெரிக்காவின் சுயசறுக்கல்களே சீனாவை முதலிடத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளன.

2026-ம் ஆண்டில் அமெரிக்காவின் ராஜதந்திர செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 76.7 ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 4-வது ஆண்டாகச் சரிவைச் சந்தித்து வரும் அமெரிக்காவுக்கு, 2018-க்குப் பிறகு ஒரே ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய அடி இது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒருதலைப்பட்சமான வெளியுறவுக் கொள்கை, வர்த்தக வரிகள், ஈரானுடனான போர், சர்வதேச அமைப்புகளுடனான மோதல் போக்கு, தைவானுக்கு ஆயுத விற்பனை மற்றும் தென் கொரியாவுடனான ராணுவப் பயிற்சிகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த கருத்துக்கள் ஆகியவை ஆசிய நாடுகளிடையே அமெரிக்கத் தலைமை மீதான நம்பிக்கையைப் பலவீனப்படுத்திவிட்டன.

சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவின் தடுமாற்றம் சீனாவுக்குச் சாதகமாக மாறியிருக்க, ஆசியாவின் 'முக்கிய சக்தியாக' இந்தியா தனது இடத்தைத் தக்கவைத்து நிதானமாக முன்னேறி வருகிறது!

திருப்பரங்குன்றம்: "தீபம் ஏற்றாவிட்டால், தவெக அரசைக் கலைக்க வேண்டும்!" - எச்சரிக்கும் இந்து முன்னணி

உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா அல்லது கடந்த காலத்தைப்போல் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத நிலை ஏற்பட்டுவிடுமா... என்ற திக் திக் சூழ்நிலை நிலவி வருகிறது... மேலும் பார்க்க

'5 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால்தான் சரக்கு'- டாஸ்மாக் கடை பேடிஎம் மெஷினைத் தூக்கிக்கொண்டு ஓடிய இளைஞன்

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியில் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடை (எண்: 13511) செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மதுப்பிரியர்கள் இங்கு வந்து மது வாங்... மேலும் பார்க்க

போருக்கும் ரெடி, பேச்சுவார்த்தைக்கும் ரெடி: ஈரான் சொல்லும் நிலைப்பாடு என்ன?

நவம்பர் 3-ம் தேதி மிட் டேர்ம் தேர்தல் முடிந்து, அந்தத் தேர்தலின் முடிவுகளும் வெளியாகிவிட்டன. ஆனால், இன்னமும் ஈரான் போரில் அடுத்தக்கட்டத்தை முன்னெடுக்கவில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதற்குத் தேர்தலில் ... மேலும் பார்க்க

"தவெக கட்சி ‘அரசியல் பிணி’ மட்டுமல்ல; அது ஒரு ‘சமூகப் பிணி’ "- ஸ்டாலின் விமர்சனம்

அண்ணா அறிவாலயத்தில் நேற்று (நவ.22) குடிஅரசு இதழ் முழுத்தொகுப்பை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நம்முடைய ஆட்சியில், தமிழ்நாட்டு மக்களுக்குப் பணவீக்கத்தின் பாதிப்பே ... மேலும் பார்க்க

`இனி கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல்'- தவெக அரசின் அறிவிப்பால் கொந்தளிக்கும் விவசாயிகள்!

உணவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

`பாமக ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் 70% பிரச்னைகளைத் தீர்ப்போம்!’ - அன்புமணி சொல்வதென்ன?

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி, ``மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. உச்ச நீதிமன்ற... மேலும் பார்க்க