செய்திகள் :

’எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காத ஜோசப் விஜய்தான் முதல் குற்றவாளி’– வானதி சீனிவாசன்!

post image

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தும், மூன்று மாதங்களுக்கும் மேலாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு அதை மூடி மறைக்கப் பார்த்தது. ஆனால், தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிட்டதால், வேறு வழியின்றி அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை வேடிக்கை பார்க்க மாட்டேன் என, முதலமைச்சராகப் பதவியேற்றதும் பலமுறை வீர வசனம் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்தும் நடவடிக்கை எடுக்காத ஜோசப் விஜய் தான் முதல் குற்றவாளி.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மட்டுமல்லாது, அவரை காப்பாற்ற முயற்சித்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதத்தில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அவமானம். த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது என்பது பா.ஜ.க-வின் தொடர் எதிர்ப்புகளுக்கும், இடைவிடாத போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி. ஆளுங்கட்சி என்ற அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது என்பதற்கு இந்தக் கைது ஒரு எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும்.

விசாரணை எவ்வித அரசியல் தலையீடும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்ற சலுகையும் இன்றி நேர்மையாக நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவாக நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த இக்கட்டான சூழலிலும் மன உறுதியுடன், பொறுமையுடனும், தனக்கு நேர்ந்த அநீதியைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, மற்ற பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் உயரதிகாரிக்கு மனமார்ந்த பாராட்டுகள். பெண்களின் கண்ணியத்திற்கும் பாதுகாப்பிற்கும் நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க-வின் குரல் ஓயாது” எனத் தெரிவித்துள்ளார்.

"மாநில உரிமைகளுக்காக கடந்த காலங்களில் மிக வலுவாகக் குரல் கொடுத்த கட்சி திமுக, ஆனால்.!"- சசி தரூர்

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவிற்கு திமுக நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது அதிருப்தியை வெளி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: 'கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது தவெக அரசு'- ஸ்டாலின் விமர்சனம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” - உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மோடி பதிவு

கார்த்திகை திருநாளை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை மட்டும் வழக்கமாக தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது. ஆனால், அந்த உத்தரவின்படி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது: "முதல்வர் விஜய் நீங்க கைது பண்ணல, நாங்க கைது பண்ண வெச்சோம்"- இபிஎஸ்

மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கைது குறித்து பதிவிட்டிருக்கும் அதிமுக பொது... மேலும் பார்க்க

Delimitation: `மக்களவை தொகுதிகள் சமமாக 50% உயர்வு; 2051 வரை மாற்றமில்லை'- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளைச் சரிசமமாக 50% உயர்த்தும் முக்கியத் திருத்தங்கள் அடங்கிய தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை இன்று (27.11.2026) பச்சைக்கொடி காட... மேலும் பார்க்க

`21-ம் நூற்றாண்டு எட்டப்பர்கள்' Vs `மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல மாட்டோம்' திமுக - காங் வார்த்தை போர்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிவிப்பைத் தொடர்ந்து, 'தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் தயாராகிவரும் எட்டப்பர்கள், கைப்புள்ள, வீர வசனம் பேசியவர்களின் அந்தர் பல்டி' என்று தி.மு.க-வை மாணிக்கம் தாக... மேலும் பார்க்க