செய்திகள் :

ஒரு பதவி; 3 கெட்டப்; காங்கிரஸ், பா.ஜ.க, சுயேச்சை என 3 வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பெண்

post image

தேர்தலில் ஒருவர் ஒரு கட்சி சார்பாக போட்டியிடுவது குறித்து கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் ஒரு பெண் மூன்று கட்சிகள் சார்பாக ஒரே பதவிக்கு போட்டியிட்டு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அங்குள்ள பிரஜ்நகர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வத்தி குமாரி என்ற பெண் முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ வாஜிப் அலி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் கையெழுத்திடும் போது அவர் சிவப்பு நிற புடவையில் வந்து முகத்தை மூடியபடி வந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் தனது ஆடையை பச்சை நிற சல்வார் சூட் ஆக மாற்றி, அதன் 'துப்பட்டா'வால் முகத்தை மூடிக்கொண்டு, எம்.எல்.ஏ ஜவஹர் சிங் பெத்தம் முன்னிலையில் பாஜக வேட்பாளராக இரண்டாவது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் மூன்றாவது முறையாக, சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, அப்பெண் மஞ்சள் நிற சேலையில் முகத்தை மூடாமல் வந்திருந்தார்.

முன்னதாக பிரஜ்நகர் பஞ்சாயத்து சமிதி தலைவராக பணியாற்றிய பெண்ணின் மாமனார் அர்ஜுன் பிரதான் தேர்தல் ஏற்பாடுகளை முன்னின்று செய்தார். அவர் மூன்று கட்சி சார்பாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததை யாரும் கவனிக்கவில்லை. தேர்தலில் அவர் சுயேச்சையாக போட்டியிட்டதில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றவுடன் அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறோம் என்று கூறி அவரை தங்களது கட்சி உறுப்பினர் என்று பா.ஜ.க உரிமை கோரியது.

ஒரு கட்சியின் சீட்டில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று கருதி எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் ஒரே பதவிக்கு காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் சுயேச்சை என மூன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் விதிகளின்படி, ஒரு வேட்பாளர் ஒரு வார்டு அல்லது தொகுதிக்கு நான்கு வேட்பு மனுக்கள் வரை தாக்கல் செய்யலாம், ஆனால் அவர்கள் ஒரு அரசியல் கட்சியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தலாம் அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிடலாம். ஆனால் விதிகளை மீறி 3 கட்சிகள் சார்பாக குமாரி போட்டியிட்டுள்ளார்.

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

63 வயது பெண்ணைக் காதல் திருமணம் செய்த 75 வயது முதியவர்; முதியோர் இல்லத்தில் சுவாரஸ்யம்!

வயதான காலத்தில் பெற்றோரைக் கவனித்துக்கொள்வது பிள்ளைகளுக்கு மிகப்பெரிய பாரம் என்று அதிகமானோர் நினைக்கின்றனர். பெற்றோர் தங்களது சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த பிறகு அவர்களைச் சரியாகக் கவனிப்பத... மேலும் பார்க்க

ஷாருக்கானிடம் `அமைதியாக இருங்க' என சொன்ன ஆனந்த் அம்பானி - வைரல் வீடியோவை நீக்க 48 மணி நேரம் கெடு!

ஆன்மீக மதகுரு ஜக்கி வாசுதேவ் சத்குருவுடனான உரையாடலில் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி மற்றும் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். இந்த உரையாடலின் போது ஷாருக்கானிடம் அமைதியாக இருக்கும்படி ஆனந்த் அம்பானி சொன்ன... மேலும் பார்க்க

Elon Musk: 'மதிய உணவுக்கு No!' - எலான் மஸ்க்கின் வித்தியாசமான டயட் பிளான்!

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் உணவுப் பழக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.சமீபத்தில் அவர் பகிர்ந்த தகவலின்படி, தனது காலை உணவில் ஸ்டீக் (Steak), முட்டை மற்றும்... மேலும் பார்க்க

100 அடி நீளம், ரூ.1 கோடி மதிப்பு; 500 ரூபாய் நோட்டு மாலைகளை மணமகன்களுக்கு அணிவித்த மைத்துனர்

திருமணத்தில் மணமக்கள் விலை உயர்ந்த ஆடைகள் அணிவது வழக்கமான ஒன்றுதான். அதேபோன்று திருமண விருந்தில் பணக்காரர்கள் தங்களது செல்வாக்கை நிரூபிக்க பலவகையான சாப்பாடு போட்டு விருந்தினர்களை திக்குமுக்காட வைப்பது... மேலும் பார்க்க

பாகுபலி, ராபின் ஹூட் போல செயல்படாதீர்கள் - பீகார் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை

பீகாரில் உள்ள செசன்ஸ் கோர்ட் நீதிபதி அனில் குமார், ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறை அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டார். ஆனால், அந்தக் காவல்துறை அதிகாரி அதைச் செய்யவில்லை. ... மேலும் பார்க்க

அவதூறு வழக்கு; `யூடியூபர் துருவ் ராட்டிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட்'- நீதிமன்றம் உத்தரவு

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, விகாஷ் பாண்டே என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டி யூடியூபர் துருவ் ராட்டி 2018ம் ஆண்டு காணொளி வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக விகா... மேலும் பார்க்க