செய்திகள் :

ஷாருக்கானிடம் `அமைதியாக இருங்க' என சொன்ன ஆனந்த் அம்பானி - வைரல் வீடியோவை நீக்க 48 மணி நேரம் கெடு!

post image

ஆன்மீக மதகுரு ஜக்கி வாசுதேவ் சத்குருவுடனான உரையாடலில் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி மற்றும் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். இந்த உரையாடலின் போது ஷாருக்கானிடம் அமைதியாக இருக்கும்படி ஆனந்த் அம்பானி சொன்னதாக கூறி சமூக வலைத்தள பிரபலம் சுவிக்யா சர்மா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டார்.

கடந்த 21ம் தேதி மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்ற குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026 நிகழ்வில், ஷாருக்கான், ஆனந்த் அம்பானி மற்றும் ஆன்மீகத் தலைவர் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தபோது இந்தக் காட்சிப் பதிவு எடுக்கப்பட்டது.

அந்த வீடியோ வைரலானது. வைரலான ரீல்ஸ் வீடியோவில், அனந்த் அம்பானி சத்குருவுடன் உரையாடும் காட்சிகளும், ஷாருக்கானுக்கும் அம்பானிக்கும் இடையேயான உரையாடலைக் காட்டும் தனி கிளிப்பும் இடம்பெற்றிருந்தது. உரையாடலின் போது ஷாருக்கானிடம் ஆனந்த் அம்பானி அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்ட வீடியோவும் வெளியாகி இருந்தது.

இந்த வீடியோவுக்காக நடிகர் ஷாருக்கானின் சட்டக் குழு சுவிக்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இன்டெர் சன்ஸ் லீகல் என்ற சட்ட நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸில், இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது மற்றும் சரிபார்க்கப்படாதது என குறிப்பிடப்பட்டுள்ளது. திரிக்கப்பட்ட தலைப்பும் கருத்துகளும் ஷாருக்கானின் நற்பெயர், பொது பிம்பம் மற்றும் கண்ணியத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது. எனவே சர்ச்சைக்குரிய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவைத் தனது கணக்கிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

இந்த வீடியோக்களை மீண்டும் வெளியிடுவதையோ அல்லது பகிர்வதையோ தவிர்க்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தும் அனைத்துத் தலைப்புகள் மற்றும் கருத்துகளை நீக்கவோ அல்லது திருத்தவோ வேண்டும். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் வரை, அசல் வீடியோ காட்சிகள் மற்றும் தொடர்புடைய தகவல் தொடர்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிமொழியைச் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸைப் பெற்ற பிறகு, சுவிக்யா சர்மா சட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மற்றொரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். தனது ரீல்ஸ் வீடியோவிற்கு ஷாருக்கான் ஆட்சேபனை தெரிவிப்பதைக் கேள்வி எழுப்பியுள்ள அவர், வைரலான வீடியோ குறித்த தனது கருத்துச் சுதந்திரத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட விமர்சனம் என்று வாதிட்டுள்ளார்.

மேலும் ஷாருக்கானை வாயை மூடிக்கொள்ளச் சொன்னவர் அவரை அவமானப்படுத்தவில்லையா? அல்லது அவரை அவமானப்படுத்தியதாகச் சொல்ல ஷாருக்கானுக்கு தைரியம் இல்லையா? ஆனால் வெளிப்படையாக, நாங்கள் அவரை அவமதித்துவிட்டோம் என்று அவர் இரண்டாவது வீடியோவில் கூறினார்.

Elon Musk: 'மதிய உணவுக்கு No!' - எலான் மஸ்க்கின் வித்தியாசமான டயட் பிளான்!

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் உணவுப் பழக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.சமீபத்தில் அவர் பகிர்ந்த தகவலின்படி, தனது காலை உணவில் ஸ்டீக் (Steak), முட்டை மற்றும்... மேலும் பார்க்க

100 அடி நீளம், ரூ.1 கோடி மதிப்பு; 500 ரூபாய் நோட்டு மாலைகளை மணமகன்களுக்கு அணிவித்த மைத்துனர்

திருமணத்தில் மணமக்கள் விலை உயர்ந்த ஆடைகள் அணிவது வழக்கமான ஒன்றுதான். அதேபோன்று திருமண விருந்தில் பணக்காரர்கள் தங்களது செல்வாக்கை நிரூபிக்க பலவகையான சாப்பாடு போட்டு விருந்தினர்களை திக்குமுக்காட வைப்பது... மேலும் பார்க்க

பாகுபலி, ராபின் ஹூட் போல செயல்படாதீர்கள் - பீகார் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை

பீகாரில் உள்ள செசன்ஸ் கோர்ட் நீதிபதி அனில் குமார், ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறை அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டார். ஆனால், அந்தக் காவல்துறை அதிகாரி அதைச் செய்யவில்லை. ... மேலும் பார்க்க

அவதூறு வழக்கு; `யூடியூபர் துருவ் ராட்டிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட்'- நீதிமன்றம் உத்தரவு

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, விகாஷ் பாண்டே என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டி யூடியூபர் துருவ் ராட்டி 2018ம் ஆண்டு காணொளி வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக விகா... மேலும் பார்க்க

திருமணத் தகவல் மையத்தில் அலைமோதிய ஆண்கள்; கோழிக்கோடு சிவன் கோயிலில் பெறப்பட்ட 12,000 விண்ணப்பங்கள்!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குந்தமங்கலம் அடுத்துள்ள காரந்தூர் 'ஹர ஹர மகாதேவ' திருக்கோயில் கமிட்டி சார்பில், சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச திருமண தகவல் மையப் பதிவு முகாம் நடத்தப்பட்டு வரு... மேலும் பார்க்க

நவம்பர் 24-ம் தேதி வானில் தோன்றும் பிரமாண்ட சூப்பர்மூன் - வானை அலங்கரிக்க வரும் அரிய நிகழ்வு!

"வெண்ணிலவே... வெள்ளி வெள்ளி நிலவே..." என்று பாடல்கள் கொண்டாடும் நிலவை ரசிக்காதவர்கள் யார்? தேய்ந்தும் வளர்ந்தும், சில நேரங்களில் வெண்மையாகவும், சில நேரங்களில் பொன்னிறமாகவும் வானில் வலம் வரும் நிலவு, த... மேலும் பார்க்க