செய்திகள் :

`பேராசை' - ரூ.8 கோடி ஆசையில் கணவன், மகனை மெல்ல சாகடிக்க சாப்பாட்டில் விஷம் கலந்த மனைவி

post image

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவனின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை படிப்படியாக கொலை செய்யும் நோக்கில் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்த பெண் சிக்கினார். காசியாபாத்தின் வசுந்தரா பகுதியில் வசிக்கும் சுஷில் குமார் என்பவர் டிராவல் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சமீப காலமாக தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இரண்டு மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். அப்படி இருந்தும் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதேபோன்ற அறிகுறிகள் அவரது மகன் மற்றும் மருமகனுக்கும் ஏற்பட்டன. இதையடுத்து சுஷில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரத்தப் பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவரது உடலில் ஆபத்தான அளவில் ஈயம் கலந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதன் மூலம் அவருக்கு வந்திருக்கும் உடல் நலக்குறைவு இயற்கையானது அல்ல என்றும் திட்டமிட்டு விஷம் கொடுக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதனால் தனது மனைவிதான் உணவில் விஷம் கலந்திருக்க வேண்டும் என்று சுஷில் சந்தேகப்பட்டார்.

ஆனால் அதற்கு அவரிடம் ஆதாரம் இல்லை. அவரிடம் அவரின் 12 வயது மகள் ஒரு முறை அம்மா எனக்கும், அம்மாவிற்கும் சாப்பாட்டில் குறிப்பிட்ட பகுதியை எடுத்து வைத்துக்கொண்டு எஞ்சிய சாப்பாட்டில் எதையோ ஸ்பிரே செய்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து சுஷில் கடந்த செப்டம்பர் மாதம் இந்திராபுரம் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார்.

அதில், தனது மனைவி ரேணு மற்றும் அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து, தன்னையும், தனது மகன் மற்றும் மருமகனை கொல்லும் நோக்கில் உணவில் ஈயத்தைக் கலந்ததாகக் குற்றம் சாட்டினார். போலீஸார் ரேணுவிடம் விசாரித்தபோது சரியாக பதில் சொல்லாமல் டெல்லியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று இருந்து கொண்டார். இதையடுத்து, டெல்லியின் விவேக் விஹாரில் உள்ள அவரது தாய் வீட்டில் பதுங்கியிருந்த ரேணுவை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து இந்திராபுரம் போலீஸ் அதிகாரி அபய் ராஜேந்திர தாகா கூறுகையில், பண ஆசையால் உணவில் ஈயத்தைக் கலந்ததாக விசாரணையில் ரேணு ஒப்புக்கொண்டுள்ளார். அவர் இறந்தால் அவரின் அனைத்து சொத்தும் எனக்கு சொந்தமாகும் என்று நினைத்தேன். எனவே பேராசையின் காரணமாக, அவர்களைக் கொல்லும் நோக்கத்தில் நான் அவர்களின் உணவில் ஈயத்தைக் கலக்க ஆரம்பித்தேன். என்று ரேணு விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சுஷிலின் 6 கோடி மதிப்பிலான டிராவல் ஏஜென்சி நிறுவனத்தை அபகரிக்கவும், சுஷிலின் ரூ.2 கோடி ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறவும் அவர் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்''என்று தெரிவித்தார். ரேணு மீது கொலை முயற்சி மற்றும் விஷம் கொடுத்துக் காயப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சதியில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாயார், சகோதரன் மற்றும் மைத்துனர் ஆகியோரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. கடந்த 12 மாதங்களாக ரேணு இக்காரியத்தை செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி: ராகி களியில் விஷம் வைத்து கணவர் கொலை; மனைவி கைது; என்ன நடந்தது?

ராகி களியில் விஷம் வைத்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி கைது செயப்பட்டுள்ள சம்பவம், தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Murderகிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள பேலாளம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர... மேலும் பார்க்க

மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார்; உடந்தையாக இருந்த காதல் கணவர் - குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவிக்னேஷ் (25). கூலித் தொழிலாளியான இவர் பி.எஸ்.பி. ஏ.ஐ படிக்கும் 21 வயது பெண்ணை காதலித்து வந்தார். பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் ம... மேலும் பார்க்க

வேலூர்: காதல் மனைவி வெட்டிக் கொலை - நடத்தை சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்!

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். ஆவின் பாலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவருக்கும், கீர்த்திகா (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றத... மேலும் பார்க்க

கோர்ட் வளாகத்தில் வைத்து கை துண்டிப்பு; துப்பாக்கிச்சூடு- குற்றவாளியைக் கொல்ல நடந்த பரபரப்பு சம்பவம்

புனே, சிவாஜிநகர் கோர்ட்டில் ஆஜராவதற்காக மந்தர் மாருதி என்பவர் வந்தார். அவர்மீது கடந்த ஆண்டு நடந்த கொலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. நிலம் மற்றும் நிதிப் பிரச்னை தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் ம... மேலும் பார்க்க

இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சகஊழியர்கள்; இரு பெண்கள் உட்பட மூவர் கைது

டெல்லியில் உணவகம்(கேபே) ஒன்றில் பணிபுரியும் 22 வயது இளம் பெண் தன்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவருடன் பிரீத் விகார் பகுதியில் இருக்கும் 'சல்டனேட் கேஃப்' (Saltanate Cafe) என்ற இடத்திற்குச் சென்றார். அங... மேலும் பார்க்க

காட்பாடி: மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டிக் கொலை; சொத்துத் தகராறில் சொந்த தம்பியே வெறிச்செயல்?

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பொன்னியம்மாள். இவர்களுக்கு தினகரன் (வயது 25), மயிலழகன் (23) என்று இரு மகன்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயப... மேலும் பார்க்க