செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரம்: "அறங்காவலர் குழு எங்களிடம் ஆலோசிக்கவில்லை" - ஸ்தானிகர்கள் போர்க்கொடி

post image

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பாரம்பர்ய வழக்கபடி உச்சிப்பிள்ளையார் கோவிலில்தான் விளக்கேற்றபடும். அதுதான் கோவிலின் பழக்க வழக்கம் மற்றும் ஆகம மரபுகள் என நேற்று திருப்பரங்குன்ற அறங்காவலர் குழுவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

''இந்தத் தீர்மானத்தின்போது நாங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து எதுவுமே கருத்து சொல்லவில்லை. எங்களைக் கலந்தோசிக்கவில்லை.  இது தங்களுக்கு மன வேதனையை அளித்துள்ளது'' என்று கோவிலின் ஸ்தானிகர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து ஸ்தானிகர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “இத்திருக்கோயில் ஸ்தானிகப் பட்டர்கள் எழுதிக் கொண்டது. நேற்று நடந்து முடிந்த 2026 திருக்கார்த்திகை தீபத்தன்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக ஒரு கடிதத்தை நமது திருக்கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி வெளியிடப்பட்டது என்பதை அறிந்தோம்.

நாங்கள் இத்திருக்கோவிலில் நேற்று நடந்த கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை என்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால்களை அளித்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

உச்சநீதிமன்ற உத்தரவின் படி மலைமேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறோம். மேலும் எங்களை ஆலோசிக்கமால எங்களின் பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மனவேதனை தருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்'’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம்: `ஏன் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை?'- தவெக அரசிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தூணில் தீபமேற்ற வேண்டும் என கடந்த ஆண்டு முதல் சர்ச்சை தொடங்கியது. இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை குலைக்க திட்டமிடுவதாக விசிக, சிபிஐ உள்ளிட்ட தவெ... மேலும் பார்க்க

செங்கோட்டை: `பணம் வசூலிக்கிறாங்க; ஆனா எனக்கு பங்கு வர்றதில்ல'- போட்டுடைத்த நகராட்சி பெண் கவுன்சிலர்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். நகர்மன்றத் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த ராமலட்சுமி உள்ளார். இந்த நகராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வந்தன... மேலும் பார்க்க

``விசுவாசம் என்பது தலைமையை பலவீனப்படுத்துவதில் இல்லை" - கோவை சத்யனைச் சாடும் காயத்ரி ரகுராம்!

அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழகச் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை கழக நிர்வாகிகளும் அறிக்கை மூலம் அறிவிப்பு ஒன்றை ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை `உச்சி தூண்' - முழு தோற்றம் இதோ! | Photo Album

மலை `உச்சி தூண்' மலை `உச்சி தூண்' மலை `உச்சி தூண்' மலை `உச்சி தூண்' மலை `உச்சி தூண்' மலை `உச்சி தூண்' மலை `உச்சி தூண்' மலை `உச்சி தூண்' மலை `உச்சி தூண்' மலை `உச்சி தூண்' மலை `உச்சி தூண்' மலை `உச்சி த... மேலும் பார்க்க

``நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனிடம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்" - வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நேற்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், சுமதி ஆக... மேலும் பார்க்க