செய்திகள் :

Ramayana Part 1: ஆஸ்கர் விருது போட்டியில் நுழைந்த ராமாயணா... எந்த பிரிவில் தெரியுமா?!

post image

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரவி துபே உள்ளிட்டோர் நடித்துள்ள 'ராமாயணா: பார்ட் 1' திரைப்படம் கடந்த நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. உலகளவில் ரூ. 1,700 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்திருக்கும் இந்தப் படம், ஆஸ்கர் ரேஸிலும் நுழைந்திருக்கிறது.

99-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 14-ம் தேதி ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கான சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்யும் நிகழ்வு தொடங்கி நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) பிரிவில் சிறந்த 20 திரைப்படங்களை ஆஸ்கர் விருது தேர்வுக் குழு பட்டியலிட்டிருக்கிறது.

ஆஸ்கர் விருது

அதில், டெனிஸ் வில்லெனுவேவின் 'டூன்: பார்ட் த்ரீ', கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி', பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லரின் 'புராஜெக்ட் ஹெய்ல் மேரி', ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 'டிஸ்க்ளோசர் டே', ஆண்டனி மற்றும் ஜோ ரூசோ இயக்கிய மார்வெல் ஸ்டுடியோஸின் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' உள்ளிட்ட படங்களுடன் நிதேஷ் திவாரியின் 'ராமாயணா'வும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உறுதி செய்யப்பட்ட தகவலின்படி டிஸ்னி நிறுவனத்தின், 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே', ஜான் ஃபேவ்ரோவின் 'ஸ்டார் வார்ஸ்: தி மாண்டலோரியன் அண்ட் குரோகு', 'வேல்ஃபால்', 'மோனா' ஆகிய நான்கு படங்களும் முன்னணியில் உள்ளன. ஆஸ்கர் குறும்பட்டியலுக்கான வாக்கெடுப்பு டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி டிசம்பர் 11-ம் தேதி நிறைவடைகிறது. பல்வேறு பிரிவுகளுக்கான குறும்பட்டியல்கள் டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இறுதிப் பரிந்துரைகள் ஜனவரி 21-ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Oscar Awards: ஆஸ்கர் ரேஸில் 2 இந்தியப் படங்கள்; இளையராஜா படத்தோடு நாகாலாந்து படம் சேர்ந்தது எப்படி?

99-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கான வேலைகளையும் ஆஸ்கர் அகாடமி கவனித்து வருகிறது. இந்தாண்டு இந்தியாவின் சார்பாக 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவிற்கு மராத்த... மேலும் பார்க்க

"'ராமாயணா' படத்திற்காக 12 திரைப்படங்களை நான் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன்!" - ஏ.ஆர்.ரஹ்மான்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது, ராமாயணா பார்ட் - 1.இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானும், ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான... மேலும் பார்க்க

"சல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயை பாதுகாக்கவே நான் இருந்தேன்!" - பாதுகாப்பாளர் பகிர்ந்த தகவல்

நடிகரும் பாடிபில்டருமான கேதன் கரண்டே என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயிடம் பாதுகாப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். கேதன் கரண்டேசல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயைப் பாதுகாப்பதற்காகவே தான் பி... மேலும் பார்க்க

Salman Khan: "யார் இவர்கள் எல்லாம்? இவர்கள் என்ன ஏ.ஐ நிபுணர்களா?" - சல்மான் கான் காட்டம்

நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'மாத்ருபூமி' திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. 'மாத்ருபூமி' திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Salman Khanஇப்ப... மேலும் பார்க்க

Alia Bhatt:``மிகவும் அவமரியாதையானது" - திருமண வாழ்க்கை குறித்த விமர்சனத்துக்கு ஆலியா பட் பதில்!

பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர்கள் ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து இவர்களின் நேர்காணல்... மேலும் பார்க்க

"200 கூட்டாளிகள் தயாராக இருக்கிறார்கள்"- அமிதாப் பச்சன், அபிஷேக்கிற்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்

பாலிவுட் பிரபலங்களைச் சமீப காலமாக குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டலால் நடிகர்கள் தங்களது பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கின்றனர். புத... மேலும் பார்க்க