டோல்கேட் சார்ஜ் - ஜோக்ஸ்...

“பைபாஸ் சர்ஜரி பண்ணதுக்காக பில்லுல ‘டோல்கேட் சார்ஜ்’னு போடுறது அநியாயமா இருக்கு டாக்டர்...”
- ஏ.ஆர்.அஹமத்

``அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றீங்க?’’
``ஆபரேஷனை முடிச்சுட்டு சாட்ஜிபிடி, ஜெமினி, கிளவுடுக்கெல்லாம் நன்றி சொல்றாரே..!’’
- சிவம்

“ஆறு மாசமா என் கிளினிக்குக்கு வர்றீங்களே... முன்னேற்றம் தெரியுதா?”
“ஆமா. இப்ப ரிசப்ஷன் ஹாலையும் ஏ.சி பண்ணிட்டீங்க டாக்டர்!”
- எஸ்.முகம்மது யூசுப்.

“ரத்த அழுத்தம் குறையவே மாட்டேங்குதே... அப்படி என்னதான் பிரச்னை உங்களுக்கு?”
“போட்டோ போட்டு அரை மணி நேரமாகியும் ஒரு லைக்கூட வரலை டாக்டர்..!”
- ஆதவன்


















