ஜோக்ஸ் - பொதுக்குழு புதுக்குழு!

“நம்ம கட்சி பொதுக்குழு கூட்டத்தை ஏன் தலைவரே ஆன்லைன்ல வெச்சுட்டீங்க!?”
“கூட்டமே வரலைங்குறது வெளிய தெரியாம இருக்கத்தான்யா...!”
- கோவை.நா.கி.பிரசாத்

“எல்லாருக்கும் அழைப்பிதழ் குடுத்தும் பொதுக்குழுவுக்கு வராதவங்க யார், யாராம்?”
“நம்ம கட்சிலேயே ஒரு ‘புதுக்குழு’வாம்..!”
- தே.மிகாவேல்

“அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை அனுப்புற ஏஜென்ட்டுகள் எதுக்குய்யா போராட்டம் நடத்துறாங்க?”
“பொதுக்கூட்டம் இல்லாத நாள்களில் கட்சிகள் சார்பில் அவங்களுக்கு நிவாரணத்
தொகை வழங்கணுமாம்!”
- கே.வினோத்குமார்

“ரெய்டுக்கு வந்த அதிகாரிகளுக்கு தலைவர் ரிட்டர்ன் கிஃப்ட் குடுத்தாராமே...”
“ரெய்டின்போது பணம், நகைகளை அவங்க கைப்பற்றி எடுத்துட்டுப் போனதைத்தான் தலைவர் இப்படி கெளரவமா சொல்றார்!”
















