சேலம்: சந்தை ஏற்ற இறக்கங்களில் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டும் கருத்தரங்கு!
சேலம்: சந்தை ஏற்ற இறக்கங்களில் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டும் கருத்தரங்கு!
தற்போதைய பங்குச்சந்தைச் சூழலில் நிலவும் கடுமையான ஏற்ற இறக்கங்கள், மற்றும் உலகப் பொருளாதார மாற்றங்கள் முதலீட்டாளர்களிடையே பல்வேறு கேள்விகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
இத்தகைய சவாலான சூழலில், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகள் குறித்து மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுவது அவசியமாகிறது. சந்தையின் போக்கைப் புரிந்துகொள்வது, ரிஸ்க்குகளை மதிப்பிடுவது, பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை அறிந்துகொள்வது மற்றும் நிதி சார்ந்த சரியான முடிவுகளை எடுப்பதற்கான அறிவைப் பெறுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும்.
இந்தச் சூழலில், நிதித்துறையில் நீண்டகால அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட முன்னணி வல்லுநர்களிடமிருந்து சந்தை அறிவையும் வழிகாட்டுதலையும் பெறும் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், மேஜிக் 20 தமிழ் (Magic 20 Tamil) சார்பில் நடத்தப்படும் ‘மேஜிக் மணி மாநாடு’ வரும் நவம்பர் 21-ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.

முதலீடு தொடர்பான தகவல்களை மட்டும் பகிர்வதோடு நின்றுவிடாமல், தற்போதைய சந்தைச் சூழலை எவ்வாறு புரிந்துகொள்வது, சந்தை ஏற்ற இறக்கங்களை எவ்வாறு அணுகுவது, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி, கமாடிட்டீஸ் மற்றும் மாற்று முதலீட்டு வழிகளில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னென்ன என்பதை அனுபவமிக்க வல்லுநர்கள் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
மாநாட்டில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள்:
1. சி.கே. குமாரவேல் – CEO, Naturals
2. சிவராமகிருஷ்ணன் – CEO, Sincere Syndication
3. எலைட் ராஜா – CEO, Ebony Wealth
4. பேராசிரியர் கார்த்திகேயன் – Director, Coimbatore Capital
5. ரெஜி தாமஸ் – பங்குச்சந்தை நிபுணர், Beacon Alpha
6. செந்தில் – Fund Manager, iThought PMS
7. ஞானசேகரன் தியாகராஜன் – CEO, Commtrendz
8. சுதாகர் – Fund Manager, Sundaram Alternates

சேலம் CJ Pallazzio ஹோட்டலில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது நிதி சார்ந்த புரிதலை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற உள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரம், தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகள், கமாடிட்டீஸ் சந்தை, மாற்று முதலீட்டு வாய்ப்புகள், சந்தை ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்வது உள்ளிட்ட முக்கியமான தலைப்புகள் குறித்து அந்தந்தத் துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.
முதலீட்டில் புதிதாக நுழைய விரும்புவோர், ஏற்கெனவே முதலீடு செய்து வருபவர்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் மற்றும் நிதித்துறையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த மாநாடு பயனுள்ளதாக அமையும்.

நிகழ்ச்சி விவரங்கள்:
நிகழ்ச்சி: Magic Money TN Summit – Salem Edition (6th Edition)
தேதி: நவம்பர் 21, 2026
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: CJ Pallazzio Hotel, Salem
முன்பதிவு அவசியம்!
இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம். பங்கேற்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து தங்களது இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: 8148718103 / 9597793085


















