செய்திகள் :

ஜோக்ஸ்... - கட்சி ஆஃபீஸ்!

post image
Since 1926

“தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப்போச்சா?”

“ஆமா. கட்சி ஆபீஸ்ல அவர் பேருக்குக் கீழே, ‘24 மணி நேர சேவை’ன்னு எழுதியிருக்காரே!”

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ்..!

“தலைவர் பல கட்சிகளைப் பார்த்தவருன்னு எதைவெச்சு சொல்றே?”

“அவரோட வீட்டில் இருக்குற சூட்கேஸுகளை வெச்சுதான்!”

- மூ.மோகன்

“கட்சி ஆபீஸ் முன்னாடி, ‘இங்கு எல்லா அட்ரஸுக்கும் வழிகாட்டப்படும்'னு போர்டு வெச்சிருக்கீங்களே, ஏன் தலைவரே?”

“வழி கேட்கவாவது ஆட்களை உள்ளே வரவழைக்கலாம்னுதான்யா!”

- வி.நர்மதா

“கூட்டணியில் இணைந்துவிட்டதால், முன்பு இந்தத் தலைமையைக் கண்டபடி திட்டி நாங்கள் பேசிய வீடியோக்களையெல்லாம், தயவுசெய்து AI வீடியோக்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள் மக்களே!’’

- திருப்பூர் சாரதி

ஜோக்ஸ்... - குதிரை பேரம்...

ஜோக்ஸ்... “தலைவர் இன்னமும் சட்டமன்ற ஞாபகத்துலயே இருக்காருன்னு எதை வச்சுச் சொல்றீங்க?”“நிருபர்கள் கேள்வி கேட்டா பதில் சொல்லாம, பாட்டுப் பாடுறாரே!”- குரு ஷங்கர்ஜோக்ஸ்... “நாங்க ஆட்சிக்கு வந்தா ஊழலை வேரோ... மேலும் பார்க்க

ஜோக்ஸ்..!

ஓவியங்கள்: எம்.ஜெயசூர்யா“மந்திரியாரே, எதிரி அரசன் நம் மீது நேரடியாகப் போர்தொடுக்காமல் சைபர் அட்டாக் செய்கிறானாமே?”“ஆமாம் மன்னா... நமது அரண்மனை வைஃபை பாஸ்வேர்டை 12345 என்று வைத்ததுதான்தவறாகிவிட்டது!”-... மேலும் பார்க்க