செய்திகள் :

ஜோக்ஸ் - கஜானா காலி!

post image

ஜோக்குகளை மின்னஞ்சலில் அனுப்ப jokes@vikatan.com

ஜோக்ஸ்

“மந்திரியாரே, நமது கஜானா காலியாகிவிட்டதே, என்ன செய்யலாம்?”

“மன்னா, உடனடியாக நமது ராஜ்ஜியத்துக்கு ஒரு ‘யூடியூப் சேனல்’ ஆரம்பித்து அரண்மனை வதந்திகளை வீடியோவாகப் பதிவிடுவோம்!”

- ஆதவன்

“இடைத்தேர்தலில் நாங்கள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் என்று கேலி செய்பவர்களுக்கு நாங்கள் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம். வாக்கு எண்ணிக்கையின்போது இரண்டாவது சுற்றில் நாங்கள் முன்னணி வகித்தோம் என்பதை மறந்துவிடாதீர்கள்...”

- எல்.அருள் மொழி

“அது அரசியல் புரோக்கரோட ஆபீஸுன்னு எப்படிச் சொல்ற?"

“ ‘எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் வாங்க, விற்க அணுகவும்'னு வாசல்ல போர்டு மாட்டியிருக்கே!”

- சு.அருண் பிரகாஷ்

“மன்னர் ஏன் கோபமா இருக்காரு?”

“ ‘மின்னல் வேகத்தில் புறமுதுகிட்டு ஓடுவது எப்படி?’ன்னு அவரை ஆன்லைன் கிளாஸ் எடுக்கச் சொன்னாங்களாம்...!”

- இரா.அ.தென்றல் நிலவன்

ஜோக்ஸ் - பொதுக்குழு புதுக்குழு!

ஜோக்ஸ்“நம்ம கட்சி பொதுக்குழு கூட்டத்தை ஏன் தலைவரே ஆன்லைன்ல வெச்சுட்டீங்க!?”“கூட்டமே வரலைங்குறது வெளிய தெரியாம இருக்கத்தான்யா...!”- கோவை.நா.கி.பிரசாத்“எல்லாருக்கும் அழைப்பிதழ் குடுத்தும் பொதுக்குழுவுக்... மேலும் பார்க்க

ஜோக்ஸ் - கனவு 25

ஜோக்ஸ்“கை கால்ல மாவுக்கட்டு போட்டிருக்குற மாதிரி தலைவருக்கு சிலை வெச்சுருக்காங்களே எதுக்கு..?”“சிலை தத்ரூபமாக வேணுமுன்னு சொல்லியிருந்தோம்..!”- மு.க.இப்ராஹிம்“தலைவர் வீட்டு முன்னாடி 25 அடி கட்-அவுட் வெ... மேலும் பார்க்க

ஜோக்ஸ்... - கட்சி ஆஃபீஸ்!

Since 1926“தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப்போச்சா?”“ஆமா. கட்சி ஆபீஸ்ல அவர் பேருக்குக் கீழே, ‘24 மணி நேர சேவை’ன்னு எழுதியிருக்காரே!”- எஸ்.முகம்மது யூசுப்ஜோக்ஸ்..!“தலைவர் பல கட்சிகளைப் பார்த்... மேலும் பார்க்க

ஜோக்ஸ்... - குதிரை பேரம்...

ஜோக்ஸ்... “தலைவர் இன்னமும் சட்டமன்ற ஞாபகத்துலயே இருக்காருன்னு எதை வச்சுச் சொல்றீங்க?”“நிருபர்கள் கேள்வி கேட்டா பதில் சொல்லாம, பாட்டுப் பாடுறாரே!”- குரு ஷங்கர்ஜோக்ஸ்... “நாங்க ஆட்சிக்கு வந்தா ஊழலை வேரோ... மேலும் பார்க்க

ஜோக்ஸ்..!

ஓவியங்கள்: எம்.ஜெயசூர்யா“மந்திரியாரே, எதிரி அரசன் நம் மீது நேரடியாகப் போர்தொடுக்காமல் சைபர் அட்டாக் செய்கிறானாமே?”“ஆமாம் மன்னா... நமது அரண்மனை வைஃபை பாஸ்வேர்டை 12345 என்று வைத்ததுதான்தவறாகிவிட்டது!”-... மேலும் பார்க்க