செய்திகள் :

`பகையை மட்டுமே சம்பாதித்துள்ளேன்; காவல்துறையில் எனக்கு...'- டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆய்வாளர் திலீபன்

post image

பாலியல் குற்றாச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆறுமுகநேரி காவல் ஆய்வாளராக பணிபுரிந்த திலீபன், கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர். இவர், கடந்த 2023-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், அருமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் அயல் பணிக்காக  சென்னை பொருளாதார குற்றப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அந்த நேரத்தில் அவர் எவ்வித முன் அனுமதியோ, தகவலோ இன்றி தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்துள்ளார். அதன்படி, மொத்தம் 555 நாட்கள் பணிக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மருத்துவக் குழுவின் முன்பு ஆஜராகாமலும் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்ஸாட்வில் திலீபன்

இதன் காரணமாக இவரின் பதவி உயர்விலும் கால தாமதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், கடந்த 2025-ம்  ஆண்டு 2  ஆண்டுகள் கால தாமதமாக அவருக்கு காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவர் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி நியமனம் செய்யப்பட்டார்.  அங்கு சில மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், சக பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அந்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விளக்கமும் அளித்திருந்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே 555 நாட்கள் பணிக்கு வராமல் இருந்ததற்காக நடைபெற்று வந்த விசாரணையில்,  நெல்லை சரக ஐ.ஜி., காவல் ஆய்வாளர் திலீபனை பணியிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது முழுமையாக அவர் காவல் துறை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆறுமுகநேரி காவல் நிலையம்

இதுதொடர்பாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள  திலீபன், " ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரிடமும் பகையை மட்டுமே சம்பாதித்து வைத்துள்ளேன். காவல்துறையில் எனக்கு உரிய ஆதரவும் உதவியும் கிடைக்கவில்லை. ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் பகுதி மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மாற்றுச் சமூக மக்களின் ஆதரவுக்கு நன்றி. காவல் பணியில் இருந்து விலகுவது குறித்து  நானே முடிவெடுத்து மூன்று மாதங்களுக்கு முன்பே எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் தொடர்பான அடையாளங்களை நீக்கினேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் வழக்கில் மொத்தம் 12 சாட்சிகள் உள்ளனர். அதில் 9 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. இந்த விவகாரத்திற்கும் எனது விடுப்பு தொடர்பான சர்ச்சைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

எனது இரண்டு குழந்தைகளின் உயிரிழப்பின் போது மருத்துவச் செலவுகளுக்காக நீண்ட காலம் சம்பளமில்லா விடுப்பில் இருந்தேன். பின்னர் மூன்றாவது குழந்தையின் மருத்துவச் செலவிற்காக சுமார் ரூ.20 லட்சம்  வரை செலவிட்டேன். எனது தந்தைக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு காரணமாக சொத்துகள் மற்றும் காரை விற்று மருத்துவச் செலவுகளை மேற்கொண்டேன். அப்போதும் யாரிடமும் பணம் பெறவில்லை. கடந்த 2018 முதல்  2020  வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலுக்கு எதிராகத் தனிப்படை நடவடிக்கைகள் மேற்கொண்டு, ரூ.2 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கனிமவளங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்ததுடன், 120-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாகவே காவல்துறையினருடன் எனக்கு பகை ஏற்பட்டது.

திலீபன்

 கடந்த 2025-ம் ஆண்டு விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய போதும் பிரச்னைகள் ஏற்பட்டது. காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்ற பிறகும் மூன்று மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. என் மீதான புகார் தொடர்பான வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை. பொதுமக்களின் நலனுக்காகவே காவல்துறையில் பணியாற்றினே. ஆறுமுகநேரி பொதுமக்களுக்கு நன்றி. அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பொதுமக்களே முடிவு செய்ய வேண்டும்" என்றும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் முன்னாள் காவல் ஆய்வாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.

கடன் வாங்கி சூதாட்டம்; ரூ.4 லட்சம் இழப்பு - கடனை அடைக்க குடும்பத்தையே கொன்று கொள்ளையடித்த வாலிபர்

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் பகுதியில் உள்ள துலியாஜனில் வசித்து வந்தவர் சந்திரகாந்தா. இந்தியன் ஆயில் கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற சந்திரகாந்தா தனது மனைவி எலிசா மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவர... மேலும் பார்க்க

தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; குற்றவாளியைத் தேடும் போலீஸ்!

.நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் மருதம்நகரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தினமும் அதிகாலையில் எழுந்ததும் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் செல்வது வழக்கம். அவரது நடவடிக்கையை கண்காணித்த மர்ம நபர், அ... மேலும் பார்க்க

`ஆடையின்றி பேசுங்களேன்!’ - இன்ஸ்டாவில் வலை, வாட்ஸ்-அப்பில் ஸ்கெட்ச்; இளம்பெண்ணை தேடும் போலீஸ்!

தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு நிகராக, அதன்மூலம் நடைபெறும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியா கணக்குகள் மூலம் நாள்தோறும் குற்றங்... மேலும் பார்க்க

Bilkis Bano: “பழைய பயங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன...” - ஜாமீன் விவகாரத்தில் பில்கிஸ் பானு வேதனை

2002-ம் ஆண்டு பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளில் இருவரின் தண்டனையை நிறுத்தி வைத்து, உச்ச ந... மேலும் பார்க்க

திருச்சி: பைக்கில் சென்ற விவசாயி வெட்டிக் கொலை; 2 சிறார் உட்பட 10 பேர் கைதான பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள போதாவூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது: 46). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இன்பராஜ் (வயது: 22), என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனா... மேலும் பார்க்க

உ.பி: திருட வந்த இடத்தில் இரட்டை கொலை... பாலியல் வன்கொடுமை; இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் ரயில்வே டிக்கெட் விற்பனையாளர் சஞ்சீவ் வீட்டில் கடந்த 5ம் தேதி கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்த 23 வயது வாலிபர் ஒருவர் பணம் திருடுவதற்காக நுழைந்தார். அப்போது அந்த வ... மேலும் பார்க்க