செய்திகள் :

ஜெம் வீரமணி வழக்குகள்: 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டது விசாரணையில் கண்டுபிடிப்பு

post image

ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

யார் யார் குற்றவாளிகள்?

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றத்திற்காக

ஜெம் வீரமணி,

மகேந்திர சிம்ஹன்,

சாந்தி,

லாசர்,

கணேசன்,

சீனிவாசன்,

சக்திவேல்,

பாபு,

பார்த்திபன்,

பெருமாள் (எ) பாலா

ஆகியோர் மீது சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் (SIT) 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேற்படி எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் இதுவரை 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அறிக்கை
காவல்துறை அறிக்கை

குற்றப்பத்திரிகை தாக்கல்

மேற்படி 9 வழக்குகளில் விபச்சாரத் தடுப்புப் பிரிவு குற்ற எண். 11/2026 வழக்கில் 11.11.2026 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டு, குற்றப்பத்திரிகை நகல்கள் 17.11.2026 அன்று எதிரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கான விபச்சாரத் தடுப்புப் பிரிவு குற்ற எண். 12/2026-ல் எதிரிகள் மீது 23.11.2026 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Blue Corner Notice

தலைமறைவாகியுள்ள எதிரி பிரகாஷ் என்பவர் மீது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக Blue Corner Notice அறிவிக்கப்பட்டு, அவரைக் கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றத்தில் துரித விசாரணை நடத்தவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

”கட்சிப் பதவி வாங்கித் தரேன்”- தவெகவைச் சேர்ந்த பெண்ணுக்கு அக்கட்சி நிர்வாகி ஆபாசமெசேஜ் அனுப்பினாரா?

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் தவெக-வின் நகரச் செயலாளர் பாரதிராஜா. இவர் தவெகைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கட்சியில் பதவி வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அப்பெண் திருமணமானவர். இவரது கணவர் கருப்புசாமி... மேலும் பார்க்க

SIR: ``பிறந்த குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் மறுப்பு அதிர்ச்சியளிக்கிறது" - பினராயி விஜயன் வேதனை

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் ஹபீப் - அமீனா காதுன் தம்பதி. இவர்களுக்குக் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி தின்ஹாட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திரு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: "அறங்காவலர் குழு எங்களிடம் ஆலோசிக்கவில்லை" - ஸ்தானிகர்கள் போர்க்கொடி

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பாரம்பர்ய வழக்கபடி உச்சிப்பிள்ளையார் கோவிலில்தான் விளக்கேற்றபடும். அதுதான் கோவிலின் பழக்க வழக்கம் மற்றும் ஆகம மரபுகள் என நேற்று திருப்பரங்குன்ற அறங்காவலர் குழுவினர் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `ஏன் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை?'- தவெக அரசிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தூணில் தீபமேற்ற வேண்டும் என கடந்த ஆண்டு முதல் சர்ச்சை தொடங்கியது. இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை குலைக்க திட்டமிடுவதாக விசிக, சிபிஐ உள்ளிட்ட தவெ... மேலும் பார்க்க

செங்கோட்டை: `பணம் வசூலிக்கிறாங்க; ஆனா எனக்கு பங்கு வர்றதில்ல'- போட்டுடைத்த நகராட்சி பெண் கவுன்சிலர்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். நகர்மன்றத் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த ராமலட்சுமி உள்ளார். இந்த நகராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வந்தன... மேலும் பார்க்க