செய்திகள் :

கோவையில் அடுத்தடுத்து உயிரிழந்த நாரைகள் – ஆய்வில் உறுதியான பறவை காய்ச்சல் பாதிப்பு!

post image

கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு பகுதியில் உள்ள பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள பண்ணைகளில் சுமார் 25,000 கோழிகளை அழித்து ஆழமான குழிகளில் புதைக்கும் பணியில் கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. நோய் பாதிப்பு ஏற்பட்ட பண்ணைகளுக்குச் சீல் வைக்கப்பட்டு, அடுத்த 90 நாட்களுக்குப் புதிய கோழிகளை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நாரை
உயிரிழந்த நாரை

இந்நிலையில் கோவை மாநகரின் முக்கியப் பகுதியான சக்தி சாலையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் எதிரேயுள்ள தனியார் மருத்துவமனை அருகே மரங்களில் ஏராளமான நாரைகள் வசித்து வந்த நிலையில், கடந்த 18ம் தேதி அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நாரைகள் அடுத்தடுத்து உயிரிழந்து சாலையோரம் விழுந்து கிடந்தன. திடீரென ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது அப்பகுதி மக்கள் இடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் கோவை வனத்துறையினர் அங்கு சென்று உயிரிழந்த நாரைகளை கைப்பற்றி, உயிரிழந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் போன்ற தொற்று தாக்கி உயிரிழந்ததா அல்லது விஷம் கலந்த உணவினால் உயிரிழந்ததா என விசாரணை நடத்தி வந்தனர்.

உயிரிழந்த நாரை
உயிரிழந்த நாரை

மேலும், மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கையுடன் பிரேத பரிசோதனை செய்து அதன் மாதிரிகளை போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் உயிரிழந்த நாரைகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகரின் முக்கிய பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’காடுகள் பாதுகாப்பை தனியாரிடம் ஒப்படைப்பதா?’– தவெக அரசின் முடிவுக்கு சூழலியல் அமைப்புகள் எதிர்ப்பு!

ஓசை மற்றும் பூவுலகின் நண்பர்கள் ஆகிய சூழலியல் அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “தமிழ்நாட்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உயிரியல் பன்மயமிக்க பகுதியான முதுமலை புலிகள் காப்பகத்தில், காடு மற... மேலும் பார்க்க

30 ஆண்டுகளில் 436 தீவிர வானிலை நிகழ்வுகள், 78000 இறப்புகள்- `காலநிலை பாதிப்பில்' இந்தியா 10வது இடம்!

ஒரு பக்கம் கடும் வெப்பம்... இன்னொரு பக்கம் எதிர்பாராத கனமழை... சில இடங்களில் புயலின் தாக்கம்... வேறு சில பகுதிகளில் நீடிக்கும் வறட்சி. இயற்கையின் இந்த மாற்றங்கள், உலக நாடுகளின் எதிர்காலம் குறித்த பல க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் இடம்பெயறும் யானைகள்; வனத்துறையினர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் யானைகள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லும். அதேநேரம், யானைகளால் விவசாயிகளும், மேய்ச்சல்காரர... மேலும் பார்க்க

ஏரியா? குப்பைக் கிடங்கா? கழிவுகளால் மாசடைந்த திருப்பத்தூர் பெரிய ஏரி - நகராட்சியின் விளக்கம் என்ன?

திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, தற்போது கு... மேலும் பார்க்க

RGS VET: பசுவுக்கும் தீபாவளி! நான்காம் ஆண்டாக 'கோ-ஸ்வஸ்தி' - இந்தியாவின் முதல் மாட்டு லட்டு

"நாம் சாப்பிடும் லட்டில் இருக்கும் நெய்யைத் தந்தது யார்? பசு. ஆனால் அந்தப் பசுவுக்கு என்றாவது ஒரு லட்டு கிடைத்திருக்கிறதா?" இந்த ஒரு எளிய கேள்விதான் ஒரு புதிய தீபாவளி மரபைப் பிறப்பித்தது. நம் வீட்டு இ... மேலும் பார்க்க