செய்திகள் :

'எவருக்கும் மிசா கைதை நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கில்லை...' - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

post image

திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

முப்பெரும் விழா
முப்பெரும் விழா

மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 'தம்பி உதயநிதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மிசா, சர்க்காரியா கமிஷன் என சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார்கள். என்னுடைய மிசா கைதை உங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட உங்கள் யாருக்கும் தகுதி கிடையாது.

என்னுடைய மிசா வரலாற்றை அண்ணன் சிட்டி பாபு அவருடைய சிறை டைரியில் பகிர்ந்திருக்கிறார். அது காலத்துக்கும் நிற்கும். மிசா சிறைக் கொடுமைகளை விசாரிக்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இஸ்மாயில் கமிஷன் அமைத்தார். அதில் எல்லாம் பதிவாகியிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

படிக்கத் தெரிந்தவனாக இருந்தால் அதையெல்லாம் எடுத்து படிக்க வேண்டும். நடக்கப்போகும் இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். எவ்வளவு அகம்பாவம் இருந்தால் வேறு கட்சியின் உறுப்பினர்களை விரலில் வைத்த மை காய்வதற்குள் ராஜினாமா செய்ய வைப்பார்கள். இதுதான் இவர்களின் மானங்கெட்ட மாற்றமா? சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால் இடைத்தேர்தல் வரும். இப்போது ஜனநாயகம் மறைந்துவிட்டது இடைத்தேர்தல் வருகிறது.' என்றார்.

'பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டம் ரத்து?' - அமைச்சர் ஆதவ் சூசகம்!

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேலைகளில் தவெக முகாம் மும்முரமடைந்திருக்கிறது. தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்தும் ... மேலும் பார்க்க

'ரிசைன் பண்ணுங்க; கல்லூரி முடித்த இளம்பெண்ணை நிறுத்தி உங்களை தோற்கடிப்போம்!'-எடப்பாடிக்கு ஆதவ் சவால்

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெகவின் முக்கியஸ்தர்கள் அந்த தொகுதியில் முகாமிட்டிருக்கின்றனர். தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக வி... மேலும் பார்க்க

'கலைஞருடன் ஒப்பிட உதயநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது?' - ஆதவ் கேள்வி!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்காக பாக முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். Aa... மேலும் பார்க்க

'ஒண்ணு அரிவாள் வெட்டு; இன்னொன்னு மின்வெட்டு; ரெண்டுக்கும்தான் போட்டியே!' - ஸ்டாலின் விமர்சனம்

திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.Stalin... மேலும் பார்க்க

'நல்லவேள நான் ஜெயிக்கல...கொளத்தூர் மக்களுக்கு கோடானு கோடி நன்றி!' - மு.க.ஸ்டாலின் கலாய்!

திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.முப்பெ... மேலும் பார்க்க

ஶ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்: ``நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்" - திமுக பிரமுகர் ராம்குமார்

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்... மேலும் பார்க்க