செய்திகள் :

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாக். சூப்பர் லீக் ஒத்திவைப்பு!

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது. மேலும், இந்திய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில், ராவல்பிண்டி கிரிக்கெட் திடலுக்கு அருகில் இருந்த கட்டடங்கள், கடைகள், வணிக வளாகங்கள் கடுமையாக சேதமடைந்தன.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கிருந்தும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி வெள்ளிக்கிழமை, அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தது, போர்ப் பதற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்றி, இந்தத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற விராட் கோலி விருப்பம்?!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொ... மேலும் பார்க்க

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்! - விராட் கோலி

பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற ... மேலும் பார்க்க

மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!

மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில்... மேலும் பார்க்க

தெ.ஆ. டெஸ்ட் பயிற்சியாளர் டி20, ஒருநாள் அணிக்கும் பயிற்சியாளராக நியமனம்!

தெ.ஆ. அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளரை நியமித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் 2027 ஐசிசி உலகக் கோப்பை வரைக்கும் டெஸ்ட், ஒருநாள், டி... மேலும் பார்க்க

பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகள் அரபு அமீரகத்துக்கு மாற்றம்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கு வகைய... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தெரியாது; அஜிங்க்யா ரஹானே அதிர்ச்சி!

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தது தனக்குத் தெரியாது என இந்திய அணி வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதா... மேலும் பார்க்க