செய்திகள் :

"ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்" - பிரேமலதாவுக்கு வன்னி அரசு பதிலடி

post image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்திருக்கிறார்.

விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு யாரும் எதிர்பாராத அளவு தொகுதிகளைத் தந்தபோது, ஏற்கெனவே இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா?

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

நல்லுறவு, நல்லிணக்கத்தை கூட்டணிக் கட்சிகளுடன் பேணி பாதுகாக்கும் பொறுப்பு தலைமை தாங்கும் கட்சியிடம்தான் உள்ளது” என்று தேமுதிகவைச் சாடியிருந்தார்.

நேற்று (செப்.16) செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் திருமாவளவன் பேசியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "சகோதரர் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதனால் நீங்கள் (விசிக) கூட்டணி மாறினீர்கள், இதுதானே உண்மை? கம்யூனிஸ்டுகளைப் போல் நீங்களும் இருந்திருக்கலாமே?

நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. நீங்கள் வென்றது இரண்டு இடங்கள். அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் போயிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள். மாற்றி மாற்றிப் பேசாதீர்கள்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் வன்னி அரசிடம் இதுதொடர்பாக இன்று (செப்.17) கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "அவர்கள்(தேமுதிக) பாஜகவோடு கடந்த காலங்களில் செயல்பட்டவர்கள்.

வன்னி அரசு
வன்னி அரசு

கடைசி நேரத்தில் அந்தக் கூட்டணியா? இந்தக் கூட்டணியா? என்று இரண்டு பக்கமும் பேரம் பேசினார்கள். பின் ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்.

திமுகவுடன் ஏற்பட்ட முரண்பாட்டையும், கசப்பையும்தான் எடுத்துக் கூறினோம். எங்கள் தலைவர் பேசியதை உள்வாங்காமல் பிரேமலதா பேசுகிறார். இது அவரின் அறியாமையைத்தான் காட்டுகிறது" என்று பேசியிருக்கிறார்.

US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?

நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது. ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர்... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ஜி.கே.வாசன்

"தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்தருமப... மேலும் பார்க்க

`பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர்!'- அமைச்சர் ரமேஷ்

தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு அறநிலையத்துறைஅமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தி... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யின் லண்டன் பயணமும் கேள்விக்குறியான வெளிப்படைத்தன்மையும்!'

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்தார். ஒரு வார பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பியிருக்கிறார். இந்தப் பயணத்தில் கிட்டத்தட்ட 15,000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்... மேலும் பார்க்க

"உங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், செல்வாக்கும் தகுதியானதே!" - மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து

இன்று இந்தியப் பிரதமர் மோடியின் பிறந்தநாள்.மோடி, ரஷ்ய அதிபர் புதின் அரசியலையும் தாண்டி நல்ல நண்பர்கள்.கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புதின் டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்... மேலும் பார்க்க

"எங்க அப்பா கோவக்காரர்; நான் திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என்று சொன்னவர் துரை வைகோ.!"- கே.என் நேரு

மதிமுக எம்.பி துரை வைகோ நேற்று முன்தினம் (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா? தனது எம்.பி பதவி அப்படியே ... மேலும் பார்க்க