செய்திகள் :

கந்தர்வக்கோட்டை: முன்னாள் அமைச்சரை ஓரங்கட்டிய அதிமுக; தட்டி தூக்கிய தவெக! - யார் இந்த சுப்பிரமணியன்?

post image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் த.வெ.க சார்பில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான சுப்பிரமணியன் சுமார் 11,039 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கந்தர்வக்கோட்டையில் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (57). அ.தி.மு.கவில் அங்கம் வகித்த சுப்பிரமணியன் குளத்தூர் தொகுதியில் 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குளத்தூர் தொகுதி நீக்கப்பட்டு, கந்தர்வக்கோட்டை(தனி)தொகுதி அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக செயல்பட்ட சுப்பிரமணியனுக்கு அ.தி.மு.க சார்பில் கந்தர்வக்கோட்டையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்ற சுப்பிரமணியன் ஜெயலலிதா அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக்கப்பட்டார்.

குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெரும்பாலும் சுப்பிரமணியன் ஓரங்கட்டப்பட்டார்.

மாவட்டத்தில் அ.தி.மு.கவின் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழக்கப்படவில்லை. குறிப்பாக கிளை செயலாளார் என்ற நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் தான் 2016, 2021 தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட சீட் கேட்டு முயற்சித்தும் எந்த பலனில்லை.

இதையடுத்து, சற்றே கட்சியில் இருந்தே விலகி இருக்கும் நிலைமைக்கும் தள்ளப்பட்டிருந்தார். கந்தர்வக்கோட்டையில் போட்டியிட விருப்பமனு அளித்ததோடு, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாய்ப்பு கேட்க முயற்சி செய்திருக்கிறார்.

அந்த முயற்சியும் தோல்வியில் முடியவே கு.ப.கிருஷ்ணன் மூலம் கடந்த பிப்ரவரியில் த.வெ.கவில் ஐயக்கியமானார். தொடர்ந்து கந்தர்வக்கோட்டையில் த.வெ.க சார்பில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் வெற்றியைப் பெற்று கந்தர்வக்கோட்டையில் மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறார்.

த.வெ.க வேட்பாளராக தொகுதிக்குள் இவர் சென்ற போது, அமைச்சராக இருந்தபோதும் தொகுதிக்காக எதையும் செய்யவில்லை என்று மக்கள் மத்தியில் புகார் எழுந்தது. ஆனாலும், இவர் மீது அப்போதும் சரி இப்போதும் சரி ஊழல் குற்றச்சாட்டு இல்லாதது ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது.

இவரின் எளிமையான அடையாளமும், விஜயின் ஆதரவு அலை எல்லாம் சேர்ந்து கந்தர்வக்கோட்டையில் மகுடம் சூட வைத்திருக்கிறது.

VCK: 'ஆட்சிக்கு ஆதரவு தர விசிக பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறதா?' - ரவிக்குமார் எம்.பி., விளக்கம்

தவெகவிற்கு ஆதரவளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்றைய தினம் அறிவித்திருந்தன. அதனைத் தொடர்ந்து, தவெகவிற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது குறித்த விசிகவின் நிலைப்... மேலும் பார்க்க

அதிமுக - திமுக கூட்டணி? "அதெல்லாம் வதந்திகள்; ஆனால்..." - என்ன சொல்கிறார் சிபிஎம் எம்.ஏ. பேபி?

தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நேற்றைய தினம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சிபிஎம் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, "அதிமுகவை வ... மேலும் பார்க்க

"ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்" - எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியா... மேலும் பார்க்க

'தம்பி திருமா உடனடியாக விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்' - பாமக ராமதாஸ் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2026 தமிழ்நாடு சட்டப்பேரவை... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: சுவந்து அதிகாரி பதவியேற்பு விழா; மோடி தொட்டு வணங்கிய 97 வயது முதியவர் யார்?

பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க புதிய முதல்வராக சுவந்து அதிகாரி பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தா வந்திருந்தார். அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த மகன்லால் சர்கார் என்ற 97 வயத... மேலும் பார்க்க