VCK: 'ஆட்சிக்கு ஆதரவு தர விசிக பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறதா?' - ரவிக்குமார் எ...
VCK: 'ஆட்சிக்கு ஆதரவு தர விசிக பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறதா?' - ரவிக்குமார் எம்.பி., விளக்கம்
தவெகவிற்கு ஆதரவளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்றைய தினம் அறிவித்திருந்தன.
அதனைத் தொடர்ந்து, தவெகவிற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது குறித்த விசிகவின் நிலைப்பாடு எப்போது அறிவிக்கப்படும் என்பதை இன்று மாலை அறிவிக்கிறார் திருமாவளவன்.
அதிமுக - திமுக கூட்டணி இணைந்து, அதில் திமுகவிற்கு முதல்வர் பதவி கொடுக்கப்படுவதாகவும், தவெக கூட்டணியில் திருமா-விற்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுவதாகவும் பல்வேறு விஷயங்கள் அரசியல் சூழலில் பேசப்பட்டு வருகின்றன.

அதுபோல, விசிக கூட்டணி அமைப்பதற்குப் பல்வேறு பதவி சார்ந்த நிபந்தனைகள் வைக்கப்படுவதாகவும் பேசப்படுகின்றன.
இந்நிலையில் விசிக பொதுச்செயலாளர் எம்.பி. ரவிக்குமார், நிபந்தனை குறித்துப் பரவும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது பற்றி ரவிக்குமார், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பல்வேறு பதவிகளைக் கோருவதாகவும், நிபந்தனைகளை விதிப்பதாகவும் தற்போது பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.
Appeal
— Dr D.Ravikumar MP (@WriterRavikumar) May 9, 2026
The reports currently being circulated, claiming that the VCK is seeking various positions and making demands, are entirely contrary to the truth. We request the media not to lend credence to such reports. We further urge the media not to become complicit in attempts to…
இத்தகைய செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், விசிகவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு ஊடகங்கள் துணை போக வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.















