உதயநிதி பிறந்தநாள் பேனர்: ``ஒருசிலரது இருப்பைக் காட்ட 2 உயிர்களை இழந்துள்ளோம்" ...
கள்ளக்குறிச்சி: பெண் அலுவலரை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திக்கேயன் மீது வழக்கு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றிய தகடி கிராமத்தில் காலை உணவுத் திட்டப் பணிக்கு பணியாளரை நியமிப்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் லலிதாவிடம் போனில் தொடர்பு கொண்டு கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எம்எல்ஏ மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் போனை துண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம், மகளிர் திட்ட அலுவலர் கடந்த அக்டோபர் 15-ம் தேதியே புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில், கடந்த அக்.17-ம் தேதி புகார் அளித்துள்ளார். அங்கும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் தியாகதுருகம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்
இதனிடையே, மகளிர் திட்ட அலுவலர் லலிதா ராமநாதபுரத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த நவ.23-ம் தேதி அவரை கள்ளக்குறிச்சி ஆட்சியர் பணியில் இருந்து விடுவித்துள்ளார்.













