செய்திகள் :

அரசு மருத்துவமனை கழிவறையில் முதியவர் சடலம்; இறந்து 3 நாள்களுக்குப் பிறகு மீட்பு; நடந்தது என்ன?

post image

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாக்குட்டி ராவத்தர் (77). சுவாசக் கோளாறு காரணமாகக் கடந்த 16-ம் தேதி திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்குத் துணையாக உடன் யாரும் இல்லாமல் தனியாகச் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனை பொது மருத்துவப் பிரிவு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மாக்குட்டி ராவத்தரை, கடந்த 19-ம் தேதி இரவு 9 மணியளவில் காணவில்லை எனக் கூறப்பட்டது. மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவக் கல்லூரி போலீசாரும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வார்டிலுள்ள கழிவறை ஒன்று உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. முதலில் சுத்தம் செய்யச் சென்ற ஊழியர்கள் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு வந்துவிட்டனர். தொடர்ந்து பூட்டப்பட்டிருந்த அந்தக் கழிவறையால் சந்தேகமடைந்த ஊழியர்கள் 21-ம் தேதி கதவை உடைத்துப் பார்த்தபோது, உள்ளே மாக்குட்டி ராவத்தர் சடலமாகக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது சட்டைப் பையிலிருந்த அடையாள அட்டையில் இருந்த முகவரியைக் கொண்டு உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதியவர் இறந்த மருத்துவமனை
முதியவர் இறந்த மருத்துவமனை

"நோயாளி காணாமல் போன பிறகும் ஊழியர்கள் கழிவறையைச் சுத்தம் செய்தனர். 20-ம் தேதி கூட அவரை கழிவறை அருகே ஊழியர்கள் பார்த்துள்ளனர்" என மருத்துவமனை கண்காணிப்பாளர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் உயிரிழந்து 36 மணி நேரத்திற்கு மேலாகிவிட்டதாகவும், மாரடைப்பு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், 19-ம் தேதி இரவே அவர் கழிவறைக்குள் மாரடைப்பால் உயிரிழந்ததும், மூன்று நாள்களாக கழிவறை சுத்தம் செய்யப்படாமலும், கவனிக்கப்படாமலும் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து சி.பி.எம் கட்சியினர் மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்பினர் மருத்துவமனை நோக்கி கண்டனப் பேரணி நடத்தினர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கண்காணிப்பாளரிடம் இந்தச் சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் லிஜோ ஜே. கொல்லன்னூர் கூறுகையில், "கடந்த 19-ம் தேதி நோயாளியைக் காணவில்லை என்றதும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம். 19, 20 ஆகிய தேதிகளில் கழிவறை சுத்தம் செய்யப்பட்டது. 20-ம் தேதி இரவோ அல்லது 21-ம் தேதி அதிகாலையிலோ அவர் உயிரிழந்திருக்கலாம். 21-ம் தேதி காலை ஊழியர்கள் கதவைத் தட்டியும் திறக்காததாலேயே உடைத்துப் பார்த்தோம். மாநில சுகாதாரத் துறையைச் சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டு தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.

கள்ளக்குறிச்சி: பெண் அலுவலரை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திக்கேயன் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றிய தகடி கிராமத்தில் காலை உணவுத் திட்டப் பணிக்கு பணியாளரை நியமிப்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திக... மேலும் பார்க்க

டெல்லியில் சைபர் குற்ற கால்செண்டர்; அடிமையாக இருந்த 164 வெளிநாட்டினர்; விசாரணையில் பகீர் தகவல்கள்

இந்தியாவில் அதிக அளவில் இணைய சைபர் குற்றங்கள் நடக்கிறது. குறிப்பாக டிஜிட்டல் கைது, கடன், பங்குச்சந்தை முதலீடு எனப் பல்வேறு விதமான சைபர் மோசடிகள் ஆன்லைனில் நடக்கின்றன. இவை அனைத்துமே அதிகமாக போன் மூலமே ... மேலும் பார்க்க

CJP: வெளிநாடு செல்வதைத் தடுக்க காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்

காக்ரோச் ஜனதா கட்சியினர் கடந்த மாதம் டெல்லி மற்றும் மும்பையில் தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்தத... மேலும் பார்க்க

Dating App வலையில் சிக்கிய டாக்டர்; விடுதியில் கட்டிப்போட்டு நகை, பணம் பறிப்பு; பகீர் பின்னணி என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியின் நுழைவுப் பகுதி அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், கடந்த 20-ம் தேதி ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்தி மணிகண்டன் (23) என்பவரது பெயரில் 8 பேர் கொண்ட குழுவ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "48 மணி நேரத்துக்குள் பதில் வேண்டும்" - விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பிய பாஜக நிர்வாகி

"உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏன் ஏற்றவில்லை" என்று, தமிழக முதல்வர் விஜய்க்கு, ஆந்திர மாநில பாஜக நிர்வாகியும், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அற... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டும் மத்திய அரசு - கவனம் பெறுவது எதனால்?!

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் நவம்பர் 30-ம் தேதியும், மாநிலங்களவையில் டிசம்பர் 2-ம் தேதியு... மேலும் பார்க்க