செய்திகள் :

கஷ்டப்படவேண்டும் என்று விதி இருந்தால்கூட அதை மாற்றி நல்வாழ்வு அருளும் சிவத்தலம் இதுதான்!

post image

மகாளயபட்ச காலத்தை பித்ரு பட்சம் என்றும் சொல்வார்கள். பித்ருக்களின் ஆசியே நமக்கு நல் வாழ்வைக் கொடுக்கும். அதேவேளையில் நம் முற்பிறவி வினைகளும் நம் துன்பங்களுக்குக் காரணம்.

இந்த இரண்டையும் முற்றிலும் விலக்கி நமக்கு நலவாழ்வு தரும் ஒரு தலம் உண்டு. அதுதான் திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். முற்பிறவிப் பாவம் என்றதுமே திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம்தான் ஞாபகத்துக்கு வரும்.

இவரை புரட்டாசி மாதத்தில் தரிசிக்க வாழ்வின் துன்பங்கள் யாவும் நீங்கி முன்னேற்றமும் வளமும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. `விதி கெட்டால் மதியைப் பாரு, வீணாகிவிட்டால் மகாலிங்கத்தைப் பாரு' என்பது பொதுமக்கள் கூற்று.

விதிப்படி நீங்கள் கஷ்டப்பட்டே ஆக வேண்டும் என்று இருந்தால்கூட, அதை உங்கள் தெளிவான மதி... அதாவது, புத்தி சரிசெய்துவிடும். அதேபோல, `விதி சரியில்லை என்றால், மதி பார்' என்பது மூன்றாம் பிறை தரிசனத்தையும் குறிக்கும்.

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி

வாழ்க்கையில் தேறவே முடியாது. இனி வீண்தான் என்று இருப்பவர்கள்கூட, திருவிடைமருதூர் மகாலிங்கத்தைத் தரிசித்தால்போதும்... தோஷங்கள், பாவங்கள் நீங்கி முன்னேறுவர் என்பதும் ஐதிகம்.

ஸ்ரீசைலம் என்பது வடக்கு மல்லிகார்ஜுனம்; இடையில் உள்ளது திருவிடைமருதூர், மத்தியார்ஜுனம்; கடைசியில் தெற்கே உள்ள திருப்புடை மருதூர் என்பது புடார்ஜுனம் என்று போற்றப்படும் சிவத்தலங்கள் ஆகும். இம்மூன்று தலங்களும் அர்ச்சுனத் தலங்கள் என்று போற்றப்படுபவை.

திருவிடைமருதூர் காசிக்கு நிகரான தலங்களில் ஒன்று. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பஞ்ச குரோசத் தலங்களில் ஒன்று. இங்கு அம்பிகை, கணபதி, முருகன், வரகுண பாண்டியன் முதலானவர் வந்து வழிபட்டு அருள் பெற்றுள்ளார்கள்.

ஆலய நடுவில் மகாலிங்கேஸ்வரர் எழுந்தருளியிருக்க, அவரைச் சுற்றி விஸ்வநாதர், ரிஷிபுரீஸ்வரர், சொக்கநாதர், ஆத்மநாதர் தனிச் சந்நிதியில் அமைந்துள்ளார்கள். இதனால், இது பஞ்ச லிங்க க்ஷேத்திரம் எனப்படுகிறது.

`தெரியாமல் ஒருவனைக் கொன்றுவிட்டதால் பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்ட வரகுண பாண்டியன், இங்கு வந்து தோஷம் நீங்கி ஆறுதல் கொண்டான். அதுபோல, `தன் குருவுக்குச் செய்த துரோகத்தால் உண்டான பாவத்தை இங்கு வந்து நிவர்த்தி செய்தான் சந்திரன்' என்கிறது புராணம்.

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்

வரகுண பாண்டியன் வழிபட்டபடி இன்றும் இந்தக் கோயிலின் கிழக்கு வாசல் வழியே சென்று, சிவபூஜை முடித்து, மேற்கு வாசல் வழியே வெளியேறும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்தால் எல்லா தோஷங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

இங்கு செய்யப்படும் பிரம்மஹத்தி வழிபாடு வெகு பிரசித்தமானது. இந்தப் பரிகார வழிபாட்டில் கலந்துகொண்டால் வாழ்வின் எல்லாப் பிரச்னைகளும் நீங்கி முன்னேற்றமும் சந்தோஷமும் உண்டாகும் என்பது ஐதிகம். இந்த வழிபாட்டை முதலில் செய்து பலன் கண்ட வரகுண பாண்டியனின் திருவுருவம் இங்குள்ளது.

7 கோபுரங்கள், 7 பிராகாரங்கள், 7 கிணறுகளுடன், 27 நட்சத்திர லிங்கங்கள், 12 ராசிகளுக்கான மகாமண்டபத் தூண்கள் எனச் சுமார் 20 ஏக்கர் பரப்பில் ஆலயம் திகழ்கிறது. இங்குள்ள அம்பிகை, சுந்தரகுஜாம்பிகை. இவள், அகத்தியருக்கு அருள் செய்து சங்கீத கலையை அருளியவள். மங்கல வரங்களை அருள்வதால் இவளிடம் திருமண வரம், பிள்ளை வரம் வேண்டி வேண்டிக்கொள்வர்.

கொல்லூருக்கு அடுத்து இங்குள்ள மூகாம்பிகை விஷேசமானவள். மூகாசுரனை அழித்ததால் உண்டான தோஷம் நீங்க இங்கு வந்து நிவர்த்தி பெற்றாள் மூகாம்பிகை. மகிஷாசூரனை மிதித்தபடி நிற்கும் துர்கையின் திருக்கோலம் இங்கு விஷேசமானது.

ஆண்ட விநாயகர் என்பது இங்குள்ள விநாயகர் திருநாமம். இவரை வணங்க ஆட்சி, அதிகாரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மருத மரத்தடியில் சுயம்புவாகத் தோன்றிய மகாலிங்கேஸ்வரர் தன்னைத் தானே பூஜித்து, பிறகு சப்த ரிஷிகளுக்கும் சிவ பூஜை விதிகளைப் பயிற்றுவித்த தலம் என்பதால் இது குரு வடிவத் தலமாகவும் இருந்து, பூஜிப்பவர்களுக்கு ஞானத்தையும் அருளுகிறது.

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்

பூச நட்சத்திர நாளில் இங்கு வழிபடுவது சிறப்பு. அதேபோல் அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இது. எல்லா பூஜைகளும் முதலில் கணபதிக்கு என்பதுதானே வழக்கம். இங்கு மட்டுமே ஈசனுக்கு அடுத்துதான் விநாயகருக்கு பூஜை செய்யப்படுகிறது. பிரணவப் பிராகாரத்தில் உள்ள சாம்பவி தட்சிணாமூர்த்தி, ராஜ அலங்காரத்தில் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் செல்வாக்கு, சொல்வாக்கில் சிறக்கலாம் என்பது ஐதிகம்.

தஞ்சை அரசன் பிரதாப சிம்மன் ஆட்சியை இழந்து தவிக்க, அவன் காதலி அம்முனு, இங்கு வந்து லட்ச தீபம் ஏற்றி, தன் உருவில் ஒரு பெரிய பாவை விளக்கு உருவாக்கி இந்த ஆலயத்துக்கு அளித்தாள். அதனால் இழந்துபோன அரச வாழ்வை அடைந்தான் என்கிறது தலவரலாறு.

எனவே கடன், நோய், வழக்கு, பிரச்னை, தோல்வி, நஷ்டம் எல்லாவற்றுக்குமே தீர்வு அளிப்பவர் இந்த மகாலிங்கேஸ்வரர் என்பது மக்களின் நம்பிக்கை. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை இவர் வீற்றிருக்கும் ஊருக்கே சென்று தரிசித்துவிட்டால், வாழ்க்கை வளமாகும். நலமாகும்.

மண்டலாபிஷேகம் நிறைவு: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆன்மிக பேரொளி!

மண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவு மேலும் பார்க்க

சனி தசை: வெளியே சொல்ல முடியாமல் உள்ளூர அழுகிறீர்களா... பொங்கு சனீஸ்வரரை ஒருமுறை தரிசித்து வாருங்கள்

ஒருவரின் ஜாதகத்தின்படி சனி தசை தொடங்கினால் கஷ்டகாலமும் தொடங்கும். நம் முன்வினைக்கு ஏற்ப பலன்களைக் கொடுக்கும் நியாயாதிபதி சனிபகவான் கொடுக்கும் தண்டனைகளும் கடுமையாக இருக்கும். சிலர் வாழ்வில் விரக்திக்கே... மேலும் பார்க்க

இக்கட்டான தருணத்தில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறீர்களா... இந்த முருகன் கோயிலுக்கு வாங்க!

காஞ்சிபுரம் கோயில் மாநகரம். இங்கே இருக்கும் கோயில்களின் எண்ணிக்கை பல நூறு. அவற்றில் மகிமை வாய்ந்த பல திருத்தலங்கள் அமைந்துள்ளன. அப்படி ஒரு தலம் தான் குமரக்கோட்டம். காஞ்சிபுரத்தின் ராஜவீதியிலேயே அமைந்த... மேலும் பார்க்க

கேட்டவரம் தரும் மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகநாதேஸ்வரர் ஆலயத்தில் விளக்கேற்றி வழிபடலாம் வாருங்கள்!

பெரும்பாலும் சிவாலயங்களில் ஈசன் கிழக்கு நோக்கியே அருள்பாலிப்பார். ஆனால் மேற்கு நோக்கு ஈசன் அமர்ந்திருக்கும் ஆலயங்களும் உண்டு. அவை மிகவும் விசேஷமானவை என்பார்கள். ஒரு மேற்கு நோக்கிய சிவலிங்க தரிசனம் என்... மேலும் பார்க்க

மதுரையின் ஆன்மிக அடையாளம்… மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்! | Album

மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர்மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர்மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர்மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர்மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர்மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர்மீ... மேலும் பார்க்க