செய்திகள் :

"குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது..." - தவெக-வை ஆதரிக்க திருமா சொல்லும் காரணங்கள் என்னென்ன?

post image

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியது.

காங்கிரஸும் தவெகவுக்கு ஆதரவு அளித்து 5 இடங்களை வழங்கிவிட்டது. மீதம் தேவைப்படும் 6 இடங்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக கோரிக்கை வைத்திருந்தது.

அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு அளித்திருக்கும் நிலையில் தற்போது விசிக தலைவர் திருமாவளவனும் தவெக விஜய்க்கு ஆதரவு அளித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "விசிக கணித்தப்படி தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

திமுகவுடனான கூட்டணியில் விசிக போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். மக்கள் நலக் கூட்டணி உருவானதிலிருந்து கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கிறோம்.

இந்த அரசியல் நெருக்கடி உருவாகியிருக்கிற சூழலில், இடதுசாரி கட்சிகளும், விசிக-வும் தொலைநோக்கு பார்வையோடு, எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு இணைந்தே முடிவெடுப்போம் எனக் கலந்து பேசி அறிவித்திருக்கிறோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

விசிக-வின் உயர்நிலைக்குழுக் கூட்டம் நேற்று இணைய வழியில் நடைபெற்றது. அதில் பேசப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் தலைமை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. கலந்தாலோசித்து தவெக-விற்கு ஆதரவு கடிதத்தை வழங்கியிருக்கிறோம்.

இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதனைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்'' என்றார்.

"அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மை. ஆனால்..." - சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி

மதுரையில் எஸ்ஏபி என அழைக்கப்படும் தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பிசிஎஸ் மினி ஹாலில் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க

"ஒரே நாளில் திமுக-வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் சென்றது; ஆனால்..." - ஸ்டாலின்

தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகச் சட்டமன்றத் தேர்தலில் வென்றிருந்தாலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆதரவு கேட்டு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, ... மேலும் பார்க்க

TVK: விசிக-வைத் தொடர்ந்து முஸ்லீம் லீக் கட்சியும் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெ... மேலும் பார்க்க

TVK: "விஜய் முதல்வராவார்" - தவெக-விற்கு ஆதரவளித்த விசிக; கடிதத்தைப் பெற்ற ஆதவ் அர்ஜுனா

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெ... மேலும் பார்க்க

சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தனித்து ஆலோசனை - அதிமுகவில் பரபரப்பு!

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக சட்டமன்றத் தேர்தலில் வென்றிருந்தாலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவளிப்பதாகக் கட... மேலும் பார்க்க

VCK: 'ஆட்சிக்கு ஆதரவு தர விசிக பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறதா?' - ரவிக்குமார் எம்.பி., விளக்கம்

தவெகவிற்கு ஆதரவளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்றைய தினம் அறிவித்திருந்தன. அதனைத் தொடர்ந்து, தவெகவிற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது குறித்த விசிகவின் நிலைப்... மேலும் பார்க்க