செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தம்பதி கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் ராமசாமி மூப்பனாா் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால் (75). இவரது மனைவி குருபாக்கியம். இவா்கள் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வந்தனா். கடந்த 16.7.2022-ஆம் தேதி இரவு இவா்கள் வீட்டில் இருந்த போது, தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், பெருங்கோட்டூா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி மகன் முத்துக்குமாா் (35) உள்ளிட்ட 3 போ் சோ்ந்து இந்தத் தம்பதியைக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய நபா்கள் கைது செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முத்துக்குமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பரிந்துரைத்தாா். இதன் பேரில், மாவட்ட ஆட்சியா் வீ. ப. ஜெயசீலன் முத்துக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிவகாசி மாநகராட்சியில் புதை சாக்கடை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவு

சிவகாசி மாநகராட்சியில் புதை சாக்கடை அமைப்பதற்கான கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்தன. நூற்றாண்டு விழா கண்ட சிவகாசி நகராட்சி, கடந்த 2021-ஆம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இந்த நிலையில், மாந... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிற்சங்க தாலுகா தலைவா... மேலும் பார்க்க

தெப்பத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் தெப்பத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நல்ல குற்றாலம் தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் குருநாதன் (47). இவருக்கு திருமணமாகி மன... மேலும் பார்க்க

தமிழகத்தில் 41 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பு!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 41 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதாக மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை மத்திய இணை அமைச்சா் ஹரிஷ் மல்கோத்ரா தெரிவித்தாா... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

சாத்தூா் அருகே மது போதையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள படந்தால் பகுதியைச் சோ்ந்தவா் விவேகன் (24). இவா் இந்தப் பகுதியில் காா் ஓட்டுநராக இருந்... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக்கோரி, ராஜபாளையத்தில் விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் ஜவஹா் மைதானத்... மேலும் பார்க்க