செய்திகள் :

கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; பரபரக்கும் திருச்சி மாவட்ட திமுக!

post image

தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில், இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 3 பொலிரோ வாகனங்களில் வருகை தந்த 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலக வளாகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

ரெய்டு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்து, சுமார் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான வழக்கு விசாரணையின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கே.என்.நேருவின் வீட்டில் தொடர்ந்து ஆவணங்கள் மற்றும் சான்றுகள் சரிபார்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே, கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இன்று சோதனை நடத்தப்படுவது தெரிந்ததும், தில்லை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டின் முன்பு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமான திமுக-வினர் குவிந்தனர்.

ரெய்டு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 16-ம் தேதி கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தை தாண்டி அவரது குடும்ப உறவுகளுக்கு மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' - கே.என்.நேரு

முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின்னர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித... மேலும் பார்க்க

``அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்" - சீமான் அறிவிப்பு!

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருக்கிறார்.தான் அனைவருக்குமான பொது வேட்பாளர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் - யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்?

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்... மேலும் பார்க்க

பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு!

பிரேசிலில் நான்காவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளார் அந்த நாட்டின் அதிபர் லுலா டா சில்வா.தேர்தல் வெற்றிகடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25), பிரேசிலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆரம்பக் கட்ட வா... மேலும் பார்க்க

பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்த கலையரசன்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணரும், 'The Dravidian Model' நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீ... மேலும் பார்க்க

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் அட்மிஷன்- பெட்கள் அதிகரிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தால் தாய்மார்கள் பலரும் தற்போது பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.இதனால் அரசு மருத்துவமனைகளின் பிரசவ... மேலும் பார்க்க