செய்திகள் :

கோவையில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை; சாதிய வன்கொடுமையே காரணம் எனப் பெற்றோர் அதிர்ச்சி புகார்

post image

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கெளசல்யா தேவி தம்பதியினருக்கு, நேத்ரா (19) என்ற மகளும், அகிலன் (16) என்ற மகனும் உள்ளனர்.

அகிலன் கோவை –அவிநாசி சாலையில் உள்ள கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல அகிலன் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்றுள்ளான். அவனது அம்மா கெளசல்யா தேவி வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்படாமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

வீட்டின் கூரை ஆங்கிளில் துப்பாட்டவைக் கட்டி அகிலன் தூக்கு போட்டு மாட்டி உயிரிழந்த நிலையில் இருந்தததைப் பார்த்து கெளசல்யா தேவி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் உடலைக் கைப்பற்றிய பீளமேடு காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி
பள்ளி

இது குறித்து கெளசல்யா தேவி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, “பள்ளியில் 2 மாதங்களுக்கு முன்பு கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி வகுப்பறையில் யாரெல்லாம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இருக்கிறீர்கள் என ஆசிரியர் விஜயகுமார் கேட்டுள்ளார். அப்போது என் மகன் அகிலன் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் எனப் பெயரைக் கொடுத்துள்ளான்.

பின்னர் வகுப்பறையில் யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள் என அவர் கேட்டபோது, என் மகன் உள்ளிட்ட 4 பேர் எழுந்து நின்றுள்ளனர். அப்போது இருந்து சக மாணவர்கள் இருவர் என் மகனை சாதியின் பெயரைச் சொல்லி திட்டியும், அடித்தும் வந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் விஜயகுமாரிடம் கூறியபோதும், சாதிய உள்நோக்கத்துடன் அந்த மாணவர்களைக் கண்டிக்காமல் இருந்துள்ளார்.

பின்னர் மற்றொரு மாணவரின் கால்குலேட்டரை என் மகன் வாங்கி பயன்படுத்தியது தொடர்பாக ஆசிரியர் விஜயகுமார் தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சாதிய ரீதியாக மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவது குறித்தும், சக மாணவர்கள் விளையாட்டில் சேர்த்து கொள்ளாமல் இருப்பது குறித்தும் அகிலன் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அகிலன் தற்கொலை செய்து கொண்டான். அவனது தற்கொலைக்குச் சாதிய பிரச்னையே காரணம். இதற்கு காரணமாக மாணவர்கள், ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் தற்கொலை வழக்கு; பள்ளி ஆசிரியர் கைது

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கெளசல்யா தேவி தம்பதியினரின் மகன் அகிலன் (16), கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அகிலன் நேற்று வீட்டில் தூக்கு போ... மேலும் பார்க்க

'எங்க மகளை மும்பை கோயிலை பார்த்துவிட்டு வரலாம் என்று அழைத்து சென்றனர்' - கைதான பெண்களின் பின்னணி

மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டதில் டைகர் ஷெராப் கார் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தேவையான ஆயுதத்தை குற்... மேலும் பார்க்க

காதலனுடன் தனிமையில் இருந்தபோது அழுத 8 மாத குழந்தை கொலை; 3 ஆண்டுகளுக்குப் பின் தாய் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் திருவல்லா புளிக்கிழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுப்புநிலப் பகுதியில் 8 மாதமே ஆன பெண் குழந்தையின் சடலம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த ப... மேலும் பார்க்க

Harish: ``என்னை முடக்கி பேச விடாம பண்ணிட்டாங்க; இவரை சும்மா விடாதீங்க"- இறுதியாக ஹரிஷ் சொன்னது என்ன?

‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்னும் பெயரில் சமூக வலைதளங்களில் நிதி சார்ந்த அறிவுரைகளை வழங்கி வந்த யூடியூபர் ஹரிஷ், சென்னை முட்டுக்காடில் உள்ள அவரது வாடகை வில்லாவில் தற்கொலை செய்துகொண்டார். இன்ஸ்டாகிராமில் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பெண் குழந்தை மாயம் - ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்!

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையைச் சேர்ந்த நாடோடி சமூக தம்பதி சேகர் - பிரேமா. இவர்கள் குப்பைகளில் இருந்து பழைய பொருள்கள் மற்றும் பாட்டில்களை சேகரித்து காயலான் கடையில் விற்று அதில் கிடைக்கும் வருவாய... மேலும் பார்க்க

Finance with Harish: Cyber Bullying-ஆல் இறந்தாரா? `முதலமைச்சரை தெரியும்' என மிரட்டல்? | Full Detail

செபி என்பது பங்குச்சந்தை சரியாக இயங்குகிறதா, ஏதேனும் மோசடிகள், குளறுபடிகள் நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும் அமைப்பு அல்ல.அதைச் சார்ந்து இயங்குபவர்களும் சரியானவர்களா, பொதுவெளியில் சரியான அறிவுரைக... மேலும் பார்க்க