செய்திகள் :

கோவை மாணவன் தற்கொலை: "பள்ளிகள் சாதிவெறிக்கான களமாவதை தவெக அரசு தடுக்க வேண்டும்" - உதயநிதி

post image

கோயம்புத்தூர், பீளமேடு அருகே உள்ள அரசு உதவிபெறும் ஸ்ரீ கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த தலித் மாணவர் அகிலன் தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்.

மாட்டிறைச்சி உண்பதைக் காரணமாகக் கொண்டு சக மாணவர்களால் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 அகிலன்
அகிலன்

இதுகுறித்துப் பெற்றோரிடமும் வகுப்பாசிரியரிடமும் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் காட்டிய அலட்சியம் அவரது தற்கொலைக்குக் காரணமாக அமைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்தச் சூழலில், கழகம் - முற்போக்கு அமைப்புகள் - மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`செங்கோட்டையன் அழுத்தத்தால்தான் இந்தக் கைது நடவடிக்கை நடந்துச்சு..!' - நாதக கார்த்திகா பேட்டி

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டி... மேலும் பார்க்க

தலைமுறை தாண்டிய தமிழ்ப் பொக்கிஷங்கள்: புதுக்கோட்டை ஓலைச்சுவடிகளுக்கு புத்துயிரூட்டிய தொல்லியல் துறை!

காலம் எத்தனையோ வேகமான மாற்றங்களைச் சந்தித்தாலும், நமது முன்னோர்களின் பண்பாட்டுப் பெருமைகளையும் ஞானத்தையும் தன்னுள் தாங்கி நிற்கும் ஏடுகள் அழியாமல் காக்கப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி.புதுக்கோட்ட... மேலும் பார்க்க

Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? | Explained

இஸ்ரேலில் இதுவரை ஒரு கட்சி கூட தனியாக ஆட்சி அமைத்ததில்லை. காரணம் அதன் தேர்தல் முறை. உலகிலேயே மிகவும் விசித்திரமான, மிகவும் சிக்கலான தேர்தல் முறையைக் கொண்ட நாடுகளில் ஒன்று இஸ்ரேல். இஸ்ரேலின் நாடாளுமன்ற... மேலும் பார்க்க

"சிஜேபி போன்ற கட்சிகளுக்கு ஆதரவு நோ; எந்தக் கட்சியாக இருந்தாலும் போராட உரிமை உண்டு" - அண்ணாமலை

`வீ தி லீடர்ஸ்' அமைப்பு மூலம் பெண்கள் வளர்ச்சி மாநாடு கிருஷ்ணகிரியில் நடந்தது. கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்டஙகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்ட இம்மாநட்டில் கலந்துகொண்டு அவ்வமைப்பின் தலைவர் அண்ணா... மேலும் பார்க்க

ஞானேஷ் குமார்: ``எதிர்க்கட்சிகள் பதவி நீக்க நோட்டீஸ் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்" - ஓம் பிர்லா

தேர்தல் குளறுபடி, எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் தொட... மேலும் பார்க்க

’பொய்க்குற்றச்சாட்டில் கைது, அலைக்கழிப்பு, சிரித்து கேலி செய்த போலீஸ்’- NTK கார்த்திகா குற்றச்சாட்டு

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா, முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தை மறித்து வாக்கு கேட்டதாக கார்த்திகா மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்கு... மேலும் பார்க்க