லால்குடி: ஸ்டேஷனில் கத்தியைக் காட்டி போலீஸுக்குக் கொலை மிரட்டல் - இளைஞர் கைது!
"சனி, ஞாயிறு விடுமுறை எடுக்கும் ஒரே முதல்வர், ஸ்வீட் ப்ரோ விஜய் தான்!"- திமுக எம்.பி கனிமொழி
மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக எம்.பி கனிமொழி நேற்று (செப்.30) பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், " மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் யாரால் வந்தது என உங்களுக்கு தெரியும்.
தூயசக்தி, தூயசக்தி எனக்கூறிவிட்டு, திருட்டு சக்தியாக மாறியிருக்கிறது.

வாக்களித்த மக்களை அவமானப்படுத்தும் வகையில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தீர்ந்து போன சக்தி எனக்கூறிவிட்டு அந்த இயக்கத்தை சேர்ந்தவரை தங்கள் கட்சிக்கு அழைத்து வந்து மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி வாக்கு கேட்கிறார்கள்.
முதல்வர் விஜய், திமுக தலைவரை `மை டியர் ஸ்வீட் அங்கிள்' என்று அழைப்பதுபோல், நானும் விஜய்யை தம்பி என அழைக்கப் போகிறேன். அதாவது, ப்ரோ, `ஸ்வீட் ப்ரோ' என அழைக்கின்றேன்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த `ஸ்வீட் ப்ரோ', திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்ச்சித்து வருகிறார்.
மேலும், சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஒரே முதல்வர் விஜய்தான்.
சோசியல் மீடியாவில் விமர்சித்தால் வழக்கு பதிவு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறார்கள்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் வளர்த்த இயக்கத்தில் இருந்து, யாரும் எங்கும் செல்லமாட்டார்கள்.
அதனால், உதயசூரியனுக்கு வாக்களித்தால் இங்கிருந்து யாரும் வெளியே செல்லமாட்டார்கள். மக்கள் நம்பி வாக்களிக்கலாம்" என்று பேசியிருக்கிறார்.















