செய்திகள் :

`அதிமுகவும், தவெகவும் ஒன்று என்றால் தவெகவை கலைத்து விடுங்கள்!’ - முதல்வர் விஜய்யை தாக்கும் அதிமுக

post image

புதுச்சேரியில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது அந்தத் தொகுதி. முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டத் தலைவர்கள் தொகுதிக்குள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

உப்பளம் தொகுதியின் எம்.எல்.ஏவும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், `சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது அரசமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது' என்று அவரை கடுமையாக விமர்சித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

புதுச்சேரி அதிமுக மாநில செயலாலர் அன்பழகன் எம்.எல்.ஏ

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், ``சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் தங்கள் வேட்பாளருக்கோ அல்லது கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளருக்கோ தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை விதிக்கவில்லை.

அதே நேரத்தில் தன்னுடைய அதிகாரபூர்வ அரசு வாகனம், அரசு ஊழியர்கள், அரசு அலுவலகம் மற்றும் அரசு இயந்திரத்தை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் இந்திய அரசியலமைப்பு வகுத்திருக்கும் சட்டம். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி தற்காலிக சபாநாயகராக இருக்கும் நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும், அதனால் என் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறுகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை நான் மீறியிருப்பதாக அவர் நிரூபித்தால், என்னுடைய தற்காலிக சபாநாயகர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். அப்படி இல்லையென்றால் நாராயணசாமி அவர்கள் அரசியலை விட்டு விலகத் தயாரா? சட்டப்பேரவையில் வாக்குரிமை இல்லாத நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்கு செலுத்தும் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்து, தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் உரிமையைப் பறித்தவர்தான் இந்த நாராயணசாமி.

தற்போது தட்டாஞ்சாவடியில் நடைபெறும் இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இல்லை. அதனால் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை நம்பாமல், மக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ்
நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ்

அப்போது, `அ.தி.மு.கவும், த.வெ.கவும் ஒன்றுதான் என்று தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருக்கிறாரே…?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ``தமிழக முதலமைச்சர் விஜய் பண்பையும், மாண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அ.தி.மு.கவும், த.வெ.கவும் ஒன்று என்றால் உங்கள் கட்சியை கலைத்து விடுங்களேன். கலைத்துவிட்டு, விசில் சின்னத்துக்குப் பதில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்" என்றார்.

இடைத்தேர்தல்: ``தவெக, திமுக, அதிமுக முகாமிட்டு பணம் கொடுக்கின்றனர்" - சிபிஐ வீரபாண்டியன்

தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ வீரப... மேலும் பார்க்க

கும்பகோணம் நிதி நிறுவன விவகாரம்: திமுக எம்.பி கல்யாணசுந்தரம் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன லிமிட்டெடில் தலைவராக திமுக ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம் இருந்து வந்தார். இதன் இயக்குநராக முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், நிர்வாக இயக்குநராக வேலப்பன், கூடுதல் இ... மேலும் பார்க்க

Flydubai-க்கு அனுமதி; இஸ்ரேல் விமானத்திற்கு ‘நோ’ - சவூதி எடுத்த முடிவின் பின்னணி என்ன?

துபாயின் ஃபிளைதுபாய் விமானத்தில் நேற்று நடந்த அதிர்ச்சிச் சம்பவம் அனைவரும் அறிந்ததே. இந்த ஃபிளைதுபாய் விமானம் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குப் பறந்தது. இதில் 174 பயணிகள் பயணித்திருக்கின்றனர... மேலும் பார்க்க

மதுராந்தகம்: "தவெக அதிக பணம் தருகிறது; நீங்களும் கொஞ்சம் தாருங்கள் என்கிறார்கள்” - பெ.சண்முகம் ஷாக்

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த அனைத்துக் கட்சிகளும் தவெகவின் ‘மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில்’ இணைந்துவிட்டன. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும், திமுகக்... மேலும் பார்க்க

'என் தாயின் மீது ஆணை; மேடையில் நடந்தது இதுதான்!' - சத்தியபாமாவிடம் பேசியது குறித்து ராஜ்மோகன்

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தவெக வேட்பாளர் சத்யபாமா அழுதது நாடகம் என விமர்சனம் எழுந்த நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்திருக்கிறார். தவெக வேட்பாளர் ... மேலும் பார்க்க

``மதிமுக-வை அழிக்க 33 ஆண்டுகளாக முயற்சி செய்தது திமுக!” – துரை வைகோ சொல்வது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க வடக்கு மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கலந்து கொண்டார். இதனைத் தொ... மேலும் பார்க்க