செய்திகள் :

வயதை மறைத்து ஆன்லைனில் நட்பு: உண்மை தெரிந்ததும் பிளாக் செய்த சிறுமி... தேடி அமெரிக்கா சென்றவர் கைது!

post image

மும்பையைச் சேர்ந்த பிரீத் பங்கஜ் ஜெயின்(31) என்பவருக்கு மைனர் பெண் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. சமீபத்தில் அப்பெண்ணுக்கு பிரீத் பங்கஜ் ஜெயின் வயது குறித்த உண்மை தெரிய வந்தது. உடனே அப்பெண் ஜெயினின் சமூக வலைதள கணக்கை பிளாக் செய்துவிட்டார்.

அப்பெண்ணை தொடர்பு கொள்ள ஜெயின் முயன்றார். ஆனால் முடியவில்லை. அப்பெண் அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண்ணை தேடி ஜெயின் அமெரிக்காவிற்கு சென்றார். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் டேவிட்சன் கவுண்டியில் அப்பெண் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு நேரடியாக சென்றார். அங்கு உபெர் டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்து அதன் மூலம் மைனர் பெண்ணை பின் தொடர்ந்து சென்றார். அவரின் இந்த நடவடிக்கையை கவனித்த டாக்சி டிரைவர், இது குறித்து சந்தேகப்பட்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.

உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு ஜெயினை பிடித்துச் சென்று விசாரித்தனர். விசாரணையின்போது, ​​ஆன்லைன் டேட்டிங் மூலம் தனக்குத் தெரிந்த பெண்ணைச் சந்திக்கச் சென்றதாகவும், அவருக்கு பரிசு கொடுக்க முயன்றதாகவும் ஜெயின் போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விசாரணையில் ஜெயின் விரட்டிச் சென்ற பெண் ஒரு மைனர் என்று தெரிய வந்துள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், ஜெயின் நீண்ட காலமாக சிறுமியுடன் ஆன்லைன் பழக்கத்தில் இருந்தபோது, தனது உண்மையான வயது மற்றும் அடையாளத்தை மறைத்ததாகத் தெரிய வந்துள்ளது. இந்த உண்மை தெரிந்ததும் அப்பெண் ஜெயினுடனான உறவை துண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஜெயினைக் கைதுசெய்து அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.

அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை காவலில் வைக்க உத்தரவிட்டது. அமெரிக்காவில் மைனர் பெண்ணை சந்தித்துப் பேசி அவரை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்ததாக ஜெயின் தெரிவித்துள்ளார்.

பாபநாசம்: மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற எஸ்.எஸ்.ஐ; டிராக்டர் மோதியதில் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு... மேலும் பார்க்க

குடியாத்தம்: யானை தந்தங்களைக் கடத்திய 3 பேர் கைது - வனத்துறையினர் தீவிர விசாரணை!

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக குடியாத்தம் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துற... மேலும் பார்க்க

லால்குடி: ஸ்டேஷனில் கத்தியைக் காட்டி போலீஸுக்குக் கொலை மிரட்டல் - இளைஞர் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கல்லக்குடி அருகே உள்ள மால்வாய் சாலையில், கல்லக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சோபியா தலைமையிலான போலீஸார் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை... சொந்த வீட்டையே எரித்த இளைஞர்! - குளித்தலை அதிர்ச்சி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சி, குப்பாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சிறும்பாயி. இவர்கள், அப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமியின் கொலை - தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது ஏன்?

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலை... மேலும் பார்க்க

ஊட்டி: ரத்த தான முகாமில் சாதி கேட்கப்பட்ட அதிர்ச்சி - ரத்தம் தர மறுத்து வெளியேறிய‌ மாணவர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவி்கள் பங்கேற்று ரத்த தானம் செய்துள்ளனர். இந்த ரத்த த... மேலும் பார்க்க