செய்திகள் :

"ஒரே சூரியன், ஒரே சந்திரன் மாதிரி ஒரே தலைவன் என்றால் அது என்னோட அப்பா மட்டும்தான்"- சௌந்தர்யா

post image

'காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘லவ்’.

இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த சீரிஸை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருக்கிறார். நாளை (அக்.2) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் இந்த சீரிஸ் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்திடம் 'ஜெயிலர்-2' குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

சௌந்தர்யா ரஜினிகாந்த்
சௌந்தர்யா ரஜினிகாந்த்

அதற்கு பதிலளித்த அவர், " "தியேட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற டைட்டில் வரும்போது 'தலைவா' என்று கத்துவதுதான் சந்தோஷமே.

'ஜெயிலர்' படத்தில் முத்துவேல் என்ற கதாபாத்திரத்தில் அப்பா நடித்தது ஜகானிக். அந்தப் படத்தில் அப்பா வரும்போது தியேட்டரில் அப்படி கத்தினேன்.

ஒரே சூரியன், ஒரே சந்திரன் மாதிரி ஒரே தலைவன் என்றால் அது என்னோட அப்பா மட்டும் தான்.. அதை நான் பெருமையாகச் சொல்வேன்.

'ஜெயிலர் 2' படத்தைத் தியேட்டரில் பார்த்துவிட்டு `தலைவா' என கத்த ஆர்வமாக இருக்கிறேன். 'ஜெயிலர்-1' படத்தில் கதை, காதாபாத்திரம், என் தம்பி அனிருத் இசை எல்லாமே சிறப்பாக இருந்தது.

ஜெயிலர் 2
ஜெயிலர் 2

இப்படத்தைப் பார்த்தபோது ஒரு செலபிரேஷன் மாதிரி இருந்தது. அந்த செலபிரேஷனை என் அப்பாவால் கொடுக்க முடியும். 'ஜெயிலர்-1' படத்தை விட 'ஜெயிலர்-2' படத்தில் என் அப்பா கடினமாக உழைத்திருக்கிறார்.

மக்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதையும் புரிந்துகொண்டு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். நானும் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

ஏழு கடல் ஏழு மலை: ``ஐந்து ஆறு முறை பார்த்துவிட்டேன்; ஆனாலும்.."- இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

‘கற்றது தமிழ்’, ’தங்கமீன்கள்’, ’பேரன்பு’, ’பறந்து போ’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்... மேலும் பார்க்க

Dorothy: "என்னை விமானத்தில் ஏற்ற மறுத்தபோது அதிர்ச்சியாக இருந்தது" - ஜீவா சுப்ரமணியம் பேட்டி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி' படத்திற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப... மேலும் பார்க்க

Amala Paul: ``ஆடை படம்போல இன்னொரு படம் நடிக்க மாட்டேன்" - நடிகை அமலா பால் ஓபன் டாக்!

2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'ஆடை'. இந்தப் படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பார். வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரத்னா குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத... மேலும் பார்க்க

Meesaya Murukku 2: "நானே அவரை 'ஆதி அண்ணா'ன்னுதான் கூப்பிடணும் போல" - சுந்தர்.சி கலகல

'ஹிப் ஹாப்' தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆ... மேலும் பார்க்க

Meesaya Murukku 2: "'என்னை அப்பானு கூப்பிடுற உரிமை உனக்கு இருக்கு'னு தேவா சார் சொன்னார்"- HipHop ஆதி

ஹிப் ஹாப் தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆகி... மேலும் பார்க்க

"பாட்டுல ஒரு இடம் மட்டும் ஏன் ஹிட் ஆகணும்?" - 'பத்தா', 'ராமாயணா' குறித்து கார்த்தி நேத்தா பேட்டி

தன் வரிகளில், நம் உணர்வுகளோடு உரையாடுபவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. சமீபத்தில் வெளியான 'பத்தா' படத்தின் 'மகளே' பாடலின் வரிகளும் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அத்தோடு, ஏ.ஆர். ரஹ்மான், ஹான்ஸ்... மேலும் பார்க்க