செய்திகள் :

குடியாத்தம்: யானை தந்தங்களைக் கடத்திய 3 பேர் கைது - வனத்துறையினர் தீவிர விசாரணை!

post image

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக குடியாத்தம் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குடியாத்தம் - வேலூர் சாலையில் பைக்கில் சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் 2 தந்தங்கள் இருந்தது. அதை கைப்பற்றிய வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர்.

யானை தந்தங்கள்

விசாரணையில், லத்தேரி அருகேயுள்ள பனமடங்கி பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம், ஒடுகத்தூர் அருகேயுள்ள பாக்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி மற்றும் கோவிந்தராஜ் எனத் தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து தந்தங்களை பணம் கொடுத்து வாங்கி வந்ததாகவும், அது இறந்து கிடந்த யானையின் தந்தங்கள் எனவும் முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் வனத்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி: `என் அம்மா போல இருக்கீங்க!’ -`லிஃப்ட்’ தந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கீரை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். கீரைகளை மொத்தமாக வாங்கி கூடையில் சுமந்து, தினமும் நடந்து சென்று கீரைகளை விற்று பிழைப்பு நடத்துபவர் அவர். அதன்படி நே... மேலும் பார்க்க

பாபநாசம்: மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற எஸ்.எஸ்.ஐ; டிராக்டர் மோதியதில் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு... மேலும் பார்க்க

வயதை மறைத்து ஆன்லைனில் நட்பு: உண்மை தெரிந்ததும் பிளாக் செய்த சிறுமி... தேடி அமெரிக்கா சென்றவர் கைது!

மும்பையைச் சேர்ந்த பிரீத் பங்கஜ் ஜெயின்(31) என்பவருக்கு மைனர் பெண் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. சமீபத்தில் அப்பெண்ணுக்கு பிரீத் பங்கஜ் ஜெயின் வயது குறித்த உண்மை தெரிய வந்தது. உடனே... மேலும் பார்க்க

லால்குடி: ஸ்டேஷனில் கத்தியைக் காட்டி போலீஸுக்குக் கொலை மிரட்டல் - இளைஞர் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கல்லக்குடி அருகே உள்ள மால்வாய் சாலையில், கல்லக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சோபியா தலைமையிலான போலீஸார் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை... சொந்த வீட்டையே எரித்த இளைஞர்! - குளித்தலை அதிர்ச்சி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சி, குப்பாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சிறும்பாயி. இவர்கள், அப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமியின் கொலை - தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது ஏன்?

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலை... மேலும் பார்க்க