செய்திகள் :

'என் தாயின் மீது ஆணை; மேடையில் நடந்தது இதுதான்!' - சத்தியபாமாவிடம் பேசியது குறித்து ராஜ்மோகன்

post image

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தவெக வேட்பாளர் சத்யபாமா அழுதது நாடகம் என விமர்சனம் எழுந்த நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்திருக்கிறார்.

தவெக வேட்பாளர் சத்யபாமா நேற்று மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு போனில் அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து ராஜ்மோகன் தவெக வேட்பாளர் சத்யபாமாவிடம் ஒரு தகவலை பரிமாறி கொண்டார்.

முதல்வர் விஜய் - சத்தியபாமா
முதல்வர் விஜய் - சத்தியபாமா

அதன்பிறகு தான் அவர் அழுது கொண்டே பேச தொடங்கினார், இவை எல்லாம் ஒரு நாடகம் என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக எம்பி கனிமொழியும் 'இதற்கு முன் இப்படி ஒரு விமர்சனத்தைப் பார்த்தது இல்லை' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் விளக்கம் அளித்த ராஜ்மோகன், " திமுக எம்.பி கனிமொழி அவர்களின் கருத்து மிகப்பெரிய வன்மம். அவர்கள் சொன்னதை கேட்டு நான் அதிர்ச்சி அடைகிறேன். இதற்கு நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தாராபுரம் மேடையில் அமைச்சர் அருண்ராஜ் பேசும் போது முதல்வர் நின்று கொண்டிருக்கிறார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னார்கள்.

அதனால் அவரிடம் விரைவாக பேசுமாறு கேட்டுக்கொண்டேன். சத்யபாமா அவர்கள் பேசும் போதும் இதை தான் சொன்னேன். மக்களும் வெயிலில் வெகு நேரம் காத்திருந்தனர், முதலமைச்சரும் மேடையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் விரைவாக பேசுமாறு (Make it fast) என்று தான் கேட்டு கொண்டேன்.

முதல்வர் விஜய் - சத்தியபாமா
முதல்வர் விஜய் - சத்தியபாமா

என் தாயின் மீது ஆணையாகச் சொல்கிறேன். மேடையில் நடந்தது இதுதான். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இதனை எதிர்கட்சிகள் திரித்து பேசுவதையும் ஆதாரம் இல்லாமல் சொல்வதையும் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

கும்பகோணம் நிதி நிறுவன விவகாரம்: திமுக எம்.பி கல்யாணசுந்தரம் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன லிமிட்டெடில் தலைவராக திமுக ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம் இருந்து வந்தார். இதன் இயக்குநராக முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், நிர்வாக இயக்குநராக வேலப்பன், கூடுதல் இ... மேலும் பார்க்க

`அதிமுகவும், தவெகவும் ஒன்று என்றால் தவெகவை கலைத்து விடுங்கள்!’ - முதல்வர் விஜய்யை தாக்கும் அதிமுக

புதுச்சேரியில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது அந்தத் தொகு... மேலும் பார்க்க

Flydubai-க்கு அனுமதி; இஸ்ரேல் விமானத்திற்கு ‘நோ’ - சவூதி எடுத்த முடிவின் பின்னணி என்ன?

துபாயின் ஃபிளைதுபாய் விமானத்தில் நேற்று நடந்த அதிர்ச்சிச் சம்பவம் அனைவரும் அறிந்ததே. இந்த ஃபிளைதுபாய் விமானம் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குப் பறந்தது. இதில் 174 பயணிகள் பயணித்திருக்கின்றனர... மேலும் பார்க்க

மதுராந்தகம்: "தவெக அதிக பணம் தருகிறது; நீங்களும் கொஞ்சம் தாருங்கள் என்கிறார்கள்” - பெ.சண்முகம் ஷாக்

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த அனைத்துக் கட்சிகளும் தவெகவின் ‘மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில்’ இணைந்துவிட்டன. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும், திமுகக்... மேலும் பார்க்க

``மதிமுக-வை அழிக்க 33 ஆண்டுகளாக முயற்சி செய்தது திமுக!” – துரை வைகோ சொல்வது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க வடக்கு மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கலந்து கொண்டார். இதனைத் தொ... மேலும் பார்க்க

"சனி, ஞாயிறு விடு​முறை எடுக்கும் ஒரே முதல்வர், ஸ்வீட் ப்ரோ விஜய் தான்!"- திமுக எம்.பி கனிமொழி

மது​ராந்​தகம் திமுக வேட்​பாளர் பரந்​தாமனுக்கு ஆதர​வாக எம்.பி கனிமொழி நேற்று (செப்.30) பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பேசிய அவர், " மது​ராந்​தகம் சட்​டப்​பேர​வை தொகுதிக்கு இடைத்​தேர்​தல் யாரால் வ... மேலும் பார்க்க