செய்திகள் :

சிவப்பு எச்சரிக்கையின் கீழ் பார்மர் மாவட்டம்.. பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்!

post image

ஆபரேன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டத்துக்குச் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. விமானம், ஏவுகணை, ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதன் காரணமாக எல்லையோர மாவட்டங்களில் இரவு நேரங்களில் மின் விளக்குகளை அணைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டம் உயர் சிவப்பு எச்சரிக்கை என்ற கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளின் பாகங்கள் சிதைந்துள்ளதாகப் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அந்த மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து மக்களும் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

பார்மர் மாவட்டம் அதி சிவப்பு எச்சரிக்கை என்ற கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

போர்ப் பதற்றம் காரணமாக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சந்தை, பொது இடங்களில் மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதையும், சந்தை அல்லது பொது இடங்களில் கூடுவதோ செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின் அதை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் த... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்டுள்ள சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏ தேர்வுகள் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறுமென இன்று(மே 10) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 9 முதல் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் டிரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம் கேட்பதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், போர் நிறுத்தம் என்ன ஆனது?. ஸ்ரீநகர் முழுவதும் வெடி சப்தம் கேட்டது... மேலும் பார்க்க