செய்திகள் :

செங்கல்பட்டு: "வீடு கட்டித் தந்தும் வீடில்லாத நிலை" - கொடப்பட்டணம் இருளர்களின் கோரிக்கை என்ன?

post image

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடப்பட்டணத்தில் உள்ள இருளர் குடியிருப்பு ஊரக வளர்ச்சித்துறையின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில் வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியில், வீடுகளை முழுதாகக் கட்டி முடிக்காமல் அவர்களுக்குப் பாதியிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அங்கு உள்ள முனியம்மாள் என்பவரிடம் விசாரித்த பொழுது, ”நாங்கள் பூர்வீகமாக இங்குதான் வசித்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் தினக்கூலி வேலைக்குச் சென்று எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றோம். அரசு சார்பில் எங்களுக்கு 8 வீடுகள் கட்டித்தரப்படுவதாகக் கூறினார்கள்.

பின்பு 2 வீடுகள் மட்டுமே முழுதாகக் கட்டி முடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. மீதம் உள்ள 6 வீடுகளும் யாவும் முழுமையாகக் கட்டி முடிக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு விட்டார்கள் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை.

கட்டி முடிக்கப்படாத வீடுகள்
கட்டி முடிக்கப்படாத வீடுகள்

கொடுக்கப்பட்ட வீட்டில் நாங்கள் 15 பேர் வசித்து வருகின்றோம். அனைத்து வீடுகளும் சிறிய மழை பெய்தாலும் மழைநீர் வீடு முழுவதும் ஒழுகுகின்றது.

எங்களுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட கழிவறையிலும் மழைப் பெய்தால் மழைநீர் ஒழுகுகின்றது. எங்களுக்கு குடிநீர் வசதியும் இல்லாததால் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வரும் தண்ணீரையே உபயோகப்படுத்துகிறோம். எங்களுக்கு குடிநீர் வசதியும் செய்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

முனியம்மாள், சகுந்தலா
முனியம்மாள், சகுந்தலா

மேலும் அங்கு வசித்து வரும் சகுந்தலா என்பவரிடம் விசாரித்த பொழுது, ''எங்கள் மகனுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் தரைக் கூட சரியாக அமைக்காமல் கல்லும் ஜல்லியுமாக அப்படியே உள்ளது.

மேலும் அந்த வீட்டிற்கு ஜன்னல்கள் எதுவும் வைக்காமல் அப்படியே வெட்டவெளியாக விட்டுவைத்து உள்ளார்கள், மேலும் ஒரு சில வீடுகளிலும் எங்கள் வீடுகளிலும் ஜன்னல்கள் மேம்போக்காக வைத்து பூசாமல் அப்படியே விட்டு வைத்து உள்ளார்கள்.

கட்டி முடிக்கப்படாத வீடுகள்
கட்டி முடிக்கப்படாத வீடுகள்

மேலே அமைக்கப்பட்டுள்ள விதானம் சரியாக சுவர்களுடன் இணைக்கப்படாததால் அனைத்து வீடுகளும் சிறிய மழைக்கே மழைநீரில் மிதக்கின்றன. எனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் சன்சேடு (Sunshade) பெயர்ந்து விழும் நிலையில் சாய்ந்தவாறு மிகவும் ஆபத்தாக உள்ளது.

மேலும் எந்த வீட்டிற்கும் மின்சார சுவிட்ச்களோ அல்லது மின்விளக்கு வசதியோ வழங்காமலே நேரடியாக அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது.

மின் இணைப்பிற்காக சுவற்றில் போடப்பட்ட துளை கூட மீண்டும் பூசாமல் அப்படியே விட்டு வைத்துள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் செல்லும் பாதை கூட சரியாக அமைக்கப்படவில்லை.

அனைத்து வீடுகளும் உட்புறமும் வெளிப்புறமும் விரிசல் விழுந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மேலும் எந்த வீட்டிற்கும் கழிப்பிட வசதியும் முறையாகச் செய்து தரவில்லை. அதே போன்று அந்த 6 வீட்டிற்கும் வர்ணம் கூட பூசாமல் அரைகுறையாக வெள்ளை அடித்து வைத்துள்ளனர். இந்த வீடுகள் கட்டிக்கொடுத்தும் நாங்கள் வீடுகள் இல்லாமல் வாழ்வது போன்றே உணர்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா தங்கராஜ் அவர்களிடம் விசாரித்த பொழுது, “இங்கு 8 வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டன. அதில் இரண்டு ஜென்மன் திட்டத்திலும் மீதம் 6 வீடுகள் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில் கட்ட நிதி ஒதுக்கப்பட்டன.

பரிமளா தங்கராஜ்
பரிமளா தங்கராஜ்

இதில் ஜென்மன் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 2 வீடுகளும் முழுதும் கட்டப்பட்டு வர்ணம் பூசி முடிவு பெற்றன. மேலும் அந்த 6 வீடுகளும் முழுதும் முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டார்கள். இது குறித்து அந்த ஒப்பந்ததாரரிடம் கேட்ட பொழுது அதற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு இவ்வளவு வேலைதான் முடிக்க முடியும் என்று கூறி சென்று விட்டார்கள்.

நாங்களும் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைத் தீர்ப்பு நாளில், பல நாட்கள் மனு கொடுத்தும் இன்று வரை அதற்கான பலன் கிடைக்கவில்லை” என்று கூறினார்கள்.

மேலும் இது குறித்து அதன் வட்டார வளர்ச்சி அலுவலர் கெளரி அவர்களிடம் விசாரித்த பொழுது, ”இந்த 8 வீடுகளும் 2022 – 2023 திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைத்து 2 வருடங்கள் ஆகின்றன. ஆனால் தற்பொழுது அந்த வீடுகள் வேலை முடியவில்லை என்று கூறுகிறீர்கள்? எவ்வாறு வீடுகள் முழுவதும் வேலை முடியாமல் அவர்களிடம் ஒப்படைத்து இருப்போம்? நான் அதன் பொறியாளரைச் சென்று விசாரிக்கச் சொல்கிறேன்” என்று கூறி வைத்துவிட்டார்கள்.

மேலும் இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மரு. வீரப்பன் இ.ஆ.ப அவர்களிடம் நேரிடையாகச் சென்று விசாரித்ததில், “அந்தக் கட்டிடங்களை ஆய்வு செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் தற்பொழுது எதுவும் செய்யமுடியாது. எனவே தேர்தல் முடிந்ததும் நிதி ஒதுக்கி விரைவில் அனைத்து வீடுகளும் சரி செய்து தரப்படும்” என்று அவர் கூறினார்.

`நீங்க கண்டிப்பா வரணும்..!' - உயிர்களைக் காப்பாற்றிய இந்திய கேப்டனை இஸ்ரேலுக்கு அழைத்த நெதன்யாகு!

ஃப்ளைதுபாய் (Flydubai) விமானத்தில் ஏற்பட்ட திடீர் தாக்குதலில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, அடுத்த ஆண்டு நடைபெறும் இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க அந்த நாட்டுப் ப... மேலும் பார்க்க

தூத்துக்குடி: வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் 21வது முறையாக விழுந்த ஓட்டை; சீரமைப்பு பணிகளில் மெத்தனம்!

நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு கடந்த 20.11.2012 அன்று போக்குவரத்து தொடங்கியது. வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரையின் குறுக்கே 400 மீட்டர் தொலைவில் ப... மேலும் பார்க்க

"தோத்தாங்குளி கட்சிகள்தான் தங்கள் தோல்விக்கு SIR-ஐ காரணம் சொல்கின்றன" - நடிகை கஸ்தூரி கிண்டல்

இடைத்தேர்தல் பிரசாரம் உச்சம் எட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல்கள் குறித்தான கேள்விகளை பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி முன்வைத்தோம்..."விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி எப்படியிருக்கிறது?... மேலும் பார்க்க

"கூட்டணி அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுபடும்"- எடப்பாடி பழனிசாமி கூறியதென்ன?

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கனிதா சம்பத்தை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்.3) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்? - `ராஜினாமா' முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலேகா!

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் தலைநகரான திருவனந்தபுரத்தை பா.ஜ.க கைப்பற்றியது. இதற்கிடையே பா.ஜ.க தலைமை தன்னை தொடர்ந்து ஏமாற்றி வருவதாகக் குற்றம்சா... மேலும் பார்க்க

"ஜெயிச்சாலும் தோத்தாலும் கரை வேட்டியைக் கட்டிக்கிட்டு கெத்தா நடப்போம்" - விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கு வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிய இருக்கும் நிலையில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின... மேலும் பார்க்க